Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

Wednesday, April 30, 2008

துபாய் ஆரோக்கிய அறிவியல் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஆரோக்கிய அறிவியல் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
புதன்கிழமை, ஏப்ரல் 30, 2008


துபாய்: ஆரோக்கிய அறிவியல் என்ற நிகழ்ச்சி ஈமான் அமைப்பு சார்பில் துபாயில் நடந்தது.

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் 'ஆரோக்கிய அறிவியல்' என்ற மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த 25ம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி முன்னிலை வகித்தார். செயலாளர் யஹ்யா முஹியித்தீன் வரவேற்றார்.

துபாய் பிரைம் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் காது,மூக்கு,தொண்டை நிபுணர் காயல் டாக்டர் பி.எம். செய்யது அஹ்மது மருத்துவ அறிவியலின் வளர்ச்சி குறித்து பேசினார். மருத்துவம் சார்ந்த சந்தேகங்களை விளக்கினார்.

'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து பேசினார். டாக்டர் மாஹின் செய்யது இஸ்மாயில் பல் மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு பதலளித்தார்.

ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், கல்விக்குழு செயலாளர் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



http://thatstamil.oneindia.in/news/2008/04/30/world-madical-councelling-program-held-in-dubai.html

http://www.dinamalarbiz.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=515&Country_name=Gulf&cat=new

Thursday, April 24, 2008

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html


துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பின் சார்பில் இன்று (ஏப்ரல் 25) மாலை மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அஸ்கான் டி பிளாக்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT) உரையாற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் ஆகியோரும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712

யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888



படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html