Showing posts with label சொற்பொழிவு. Show all posts
Showing posts with label சொற்பொழிவு. Show all posts

Tuesday, March 10, 2009

துபாயில் இன்று வாராந்திர‌ மார்க்க‌ சொற்பொழிவு

துபாயில் இன்று வாராந்திர‌ மார்க்க‌ சொற்பொழிவு

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் அஸ்கான் டி பிளாக்கில் இன்று ( புத‌ன்கிழ‌மை ) 11.03.2009 மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் வாராந்திர‌ மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் துபாய் ஈமான் அமைப்பின் மீலாது விழா சிற‌ப்பு அழைப்பாள‌ர் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் ம‌வ்ல‌வி டி.எஸ்.ஏ. செய்ய‌து அபுதாஹிர் ஆலிம் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருப்ப‌தாக‌ நிக‌ழ்ச்சியின் ஒருங்கிணைப்பாள‌ர் முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் தெரிவித்துள்ளார். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

Monday, February 23, 2009

துபாய் ஈமான் மீலாதுந்ந‌பி விழா சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாய் ஈமான் மீலாதுந்ந‌பி விழா சிற‌ப்புச் சொற்பொழிவு

காய‌ல் ஆலிம் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை

அஸ்ஸலாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

க‌ட‌ந்த‌ 33 ஆண்டுக‌ளாக‌ ந‌ம் ஈமான் ( www.imandubai.org ) ச‌ங்க‌ம் இய‌ங்கி வ‌ருவ‌தையும், இத‌ன் மூல‌ம் ப‌ல்வேறு ச‌முதாய‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தையும் தாங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஆண்டும் புனித‌ மீலாது விழா ந‌ட‌த்த‌ப்பட்டு அத‌ன் மூல‌ம் அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் இந்நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடு செய்வ‌து வழ‌க்க‌ம்.

ச‌ன்மார்க்க‌க் க‌ருத்துக்க‌ளையும், ச‌முதாய‌ உண‌ர்வுக‌ளையும் இதுபோன்ற‌ நிக‌ழ்ச்சிக‌ளின் வாயிலாக‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து வைப்ப‌து இத‌ன் குறிக்கோள்.

இவ்வ‌கையில் இன்ஷா அல்லாஹ் இவ்வ‌ருட‌ புனித‌ மீலாது விழா நிக‌ழ்ச்சிக்கு காயல்ப‌ட்ட‌ண‌த்தைச் சார்ந்த‌ ஆலிம் பெருந்த‌கை ம‌வ்ல‌வி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ஸ‌லுல் உல‌மா T.S.A. செய்ய‌து அபுதாஹிர் ஆலிம் ம‌ஹ்ழ‌ரி பாஜில் ஜமாலி எம்.ஏ. அவ‌ர்க‌ள் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை த‌ர‌ இருக்கிறார்க‌ள்.

ர‌பியுல் அவ்வ‌ல் பிறை 1 முத‌ல் ( 25 பிப்ர‌வ‌ரி 2009 ) பிறை 11 வ‌ரை ( 07 மார்ச் 2009 ) தேரா கோட்டைப் ப‌ள்ளியில் ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிற‌கு சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையுட‌ன் இணைந்து தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ள‌து.

பிறை 12 ( 08 மார்ச் 2009 ) அன்று இஷாவிற்குப் பிற‌கு லூத்தா ஜாமி ஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) புனித‌ மீலாது விழா சிற‌ப்புப் பேருரை ஆலிம் அவ‌ர்க‌ளால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

பிறை 1 முத‌ல் 12 வ‌ரை ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிற‌கு குவைத் ப‌ள்ளியில் ம‌வ்லீது ம‌ஜ்லிஸ் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

பிறை 12 ( 09 மார்ச் 2009 ) அன்று அபுதாபி இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( அய்மான் ) சார்பில் மீலாது விழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மேற்க‌ண்ட‌ அனைத்து நிக‌ழ்ச்சிக‌ளிலும் பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ வேண்டுமாய் அன்புட‌ன் அழைக்கிறோம்.

ஏ. லியாக்க‌த் அலி
பொதுச்செய‌லாள‌ர்
ஈமான்

T.S.A. ய‌ஹ்யா முஹைய‌த்தீன்
விழாக்குழு செயலாள‌ர்
ஈமான்
050 58 53 888

Monday, July 28, 2008

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0731-dubai-iman-holy-special-prayer.html#cmntTop

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித மிஹ்ராஜ் இரவினையொட்டி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஹிஜிர் 1429 ரஜப் பிறை 27 ( 29 ஜுலை 2008 செவ்வாய் மாலை ) இஷா தொழுகைக்குப் பின்னர் 9.00 மணியளவில் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்க இருக்கிறார்.


புளியங்குடி மௌலவி அல்ஹாஜ் அப்துல் காதர் ரஷாதி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.

இன்ஷா அல்லாஹ் வழக்கம்போல் பயானுக்குப் பின் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் கேட்டுக் கொள்கிறார். ( 050 58 53 888 )

பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

Sunday, March 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.


சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி


தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888


http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com