Showing posts with label மீலாது. Show all posts
Showing posts with label மீலாது. Show all posts
Sunday, April 12, 2009
Friday, March 21, 2008
துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா
துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
இந்திய தூதரக அதிகாரி பி.எஸ். முபாரக் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
துபாய் ஈமான் அமைப்பு 19.03.2008 புதன்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் மீலாதுப் பெருவிழாவினை நடத்தியது. இறைவசனஙகளுடன் துவங்கிய விழாவுக்கு பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி துவக்கவுரை நிகழ்த்தினார்.
மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி விழாப்பேருரை நிகழ்த்தினார். துபாய் இந்திய தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக், லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் எம். ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ, ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், இலங்கை புஷ்ரா ஆசிரியர் மௌலவி ஏ.எல். பதுறுத்தீன் ஷர்க்கி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழாவினையொட்டி பேச்சுப்போட்டியினை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது மொஹிதீன், அப்துல் ரஹ்மான், இந்தியா சில்க் ஹவுஸ் பங்குதாரர் அபுதாகிர் உள்ளிட்டோர் வழங்கினர்.
பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு :
பொதுமக்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் பெண்கள் தட்டிச்சென்றனர். அதன் விபரம் வருமாறு : எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் - சென்னை - துபாய் விமானச்சீட்டினை பாத்திமா ஹலீமாவும், இரண்டாம் பரிசினை ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச உமரா பயண வாய்ப்பை செய்யது ரிழ்வானாவும், மூன்றாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் 500 திர்ஹத்திற்கான பரிசுக் கூப்பனை கதீஜா நஸ்ரியாவும் பெற்றனர்.
மேலும் லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் அப்துல் வாஹிதுக்கும்,அல்ஹஸீனா வழங்கும் 200 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பன்களை ஹபிப் பாத்திமா, முத்து பீவி பாத்திமா, பாயிஸா ரஹ்மான், கிருஷ்ணமூர்த்தி, முஹியித்தீன், மஷ்ரிக் இண்டர்னேஷனல் வழங்கும் ஜெனார்ட் வாட்சினை ஜஸீலா ரியாஸ், முஹம்மது ரஸீம், ஜஹ்பர் சாதிக், ஹஸீனா அன்சாரி, இராஜவேல் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கான போட்டியில் பரிசுபெற்றவர்கள் ஆவர்.
ஆலிம்களுக்காக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் துபாய் சென்னை துபாய் விமானச்சீட்டு மௌலவி முஹம்மது ரபீக் பிலாலியும், இரண்டாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் வழங்கிய 500 திர்ஹம் பரிசுக் கூப்பனை மௌலவி ஹுசைன் மக்கியும் மூன்றாம் பரிசான அல்ஹஸீனா ஜுவல்லர்சின் 200 திர்ஹம் பரிசுக்கூப்பனை சர்புதீன் ஆலிமும் பெற்றனர்.
மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் 500 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பனை ரஃபீகா சாலிஹ், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் சித்தி ரஃபீகாவுக்கும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் 200 திர்ஹம் பரிசுக் கூப்பன் ஹஸீனா காத்தூன், வஸ்பி ஸஜ்ஜாத் இம்தியாஸ், ரஷீதா இப்றாஹிம், காதிரி ஸலீம், சில்மியா ஹபிப் ரஹ்மான், ஷமீஹா பர்வீன் உள்ளிட்டவர்களும் பரிசு பெற்றனர்.
கல்விக்குழு செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன், கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின், இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஷேக் மொஹிதீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத்
Subscribe to:
Posts (Atom)