Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

Sunday, December 20, 2009

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி



இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி
வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர் இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும். ஆட்டோ
வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரின் குடும்ப
ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு
மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ800 தொகையை பங்கு முலதனமாக
ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும். 2 ஆட்டோ ஒட்டுநரின்
பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ
வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி அளிக்கின்றது.

நமது இஸ்லாமிய இளைஞர்கள் இக்கடனை பெற பின்வரும் அரசு அலுவலகங்களை தொடர்பு
கொள்ளலாம்.

மேலான்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக்
கழகம்.
807 அண்ணா சாலை
5வது தளம், சென்னை-2
தொலைபேசி:
28514846
நிகரி: 28515450

அனைத்து மாவட்ட பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்
மேலாளர், தமிழ்நாடு கூட்டறவு வங்கி
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்

Wednesday, February 25, 2009

அமீரகத்தில் மீலாது நபியை முன்னிட்டு மார்ச் 8 அன்று அரசு விடுமுறை

அமீரகத்தில் மீலாது நபியை முன்னிட்டு மார்ச் 8 அன்று அரசு விடுமுறை

அமீரகத்தில் மீலாது நபியினை முன்னிட்டு மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமையன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு நிறுவனங்களுக்கு வார விடுமுறையான வெள்ளி மற்றும் சனிக்கிழமையுடன் ஞாயிறும் விடுமுறை கிடைக்கிறது.


UAE declares public sector holiday to mark the birthday of Prophet Mohammad (PBUH)


WAM
Published: February 25, 2009, 16:56

Dubai: The UAE has declared Sunday, March 8, a holiday for the public sector to mark the birthday of Prophet Mohammad (PBUH).

According to a circular issued by Humaid Mohammad Obaid Al Qutami, Minister of Health, the public sector will get a one-day holiday on March 8 to celebrate Prophet Mohammad’s (PBUH) birthday.

All federal ministries, public departments and institutions will enjoy a long weekend.



Al Qutami seized the opportunity to congratulate President His Highness Shaikh Khalifa Bin Zayed Al Nahyan and His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, on the glorious occasion.

He also congratulated Their Highnesses the Supreme Council Members and Rulers of the Emirates as well as both the Arab and Muslim nations on the occasion.




தகவல் உதவி : கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழ்

Wednesday, December 31, 2008

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
சிவந்தி அகாடமி நடத்துகிறது


திருச்செந்தூர், ஜன.1-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது.

குரூப்-1 தேர்வு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின், சார்பு அமைப்பான சிவந்தி அகாடமி மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டும் வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு குரூப்-1 துணை ஆட்சியாளர், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர், கிராமப்புற வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய 4 துறைகளில் உள்ள 82 காலியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (குரூப்-1 பணிக்குறியீடு எண் 001) எழுத்து தேர்வு நடத்த உள்ளது.

தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஆண்- பெண் அனைவரும் எழுதலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 12.4.09 தேதி அன்று எழுத்து தேர்வு நடைபெறும்.

இதுபற்றிய அறிவிப்பு http://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தா.நா.அ.ப.தே. (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்குப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 22.01.2009. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்புகள்

இந்தத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை சிவந்தி அகாடமி வரும் பிப்ரவரி மாதம் 14.2.2009-ம் தேதி முதல் 15.3.2009-ம் தேதி வரை திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டணம், சிவந்தி அகாடமி வளாகத்தில் நடத்த உள்ளது. இந்த வகுப்புகளுக்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 ஆகும்.

இந்த பயிற்சி வகுப்பில் பொது அறிவு பாடத்தில் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.

ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் துறைப் பேராசிரியர் டாக்டர் சி.ரமேஷ் பயிற்சி வகுப்புகளுக்கு இயக்குநராக செயல்படுவார்.

தங்கும் வசதி

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் ஆதித்தனார் கல்லூரி விடுதியிலும், பெண்கள் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி கட்டணம் ரூ.60 ஆகும்

விண்ணப்பம் பெ
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் விளக்கவுரையும், விண்ணப்பப் படிவமும் ரூ.40 செலுத்தி நேரிலோ அல்லது மணிஆர்டர் மூலமோ ரூ.50 செலுத்தி சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம் -628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியில் செலுத்தி பெற்று கொள்ளலாம். மணியார்டர் பாரத்தில் தகவலுக்கான இடம் பகுதியில் எந்த பயிற்சிக்கான விண்ணப்பப்பாரம் என்றும், முகவரியை பின்கோடுடனும், தொலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 6.2.2009 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் ரூ.2000-க்கான டிமாண்ட் டிராஃப்ட் (கனரா வங்கி /ஐ.ஓ.பி./ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா / இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விடுதிக்கான தொகை ரூ.1800 பயிற்சி வகுப்பின் முதல் நாள் 14.2.2009 அன்று செலுத்த வேண்டும்.

தொடர்புக்கு

இந்த பயிற்சி வகுப்புகள் சம்பந்தமாக மேலும் விபரம் பெற விரும்புவோர் சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் எப்.லடிஸ்லாஸ் ரொட்ரிகோ எம்.ஏ.எம்.பில் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04639-242998.

இந்த தகவலை சிவந்தி அகாடமி அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர், எப்.லடிஸ்லாஸ் ரொட்ரிகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Wednesday, April 30, 2008

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை

இணையதள முகவரி: www.educationsupport.nic.in

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது.

அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும், கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்யும் குழுவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
http://www.darulsafa.com

Regards
M.G. Fakrudeen
www.mypno.blogspot.com