Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, September 19, 2010

சென்னையில் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு சென்னை : சென்னையில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் - துபாய் ) அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

சென்னையில் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு


http://mudukulathur.com/?p=2167

For more photos :

http://www.facebook.com/album.php?aid=93055&id=1207444085&l=5e77fabb25

சென்னை : சென்னையில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் - துபாய் ) அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈமான் கல்வி உதவித் தொகை மூலம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு மற்றும் மாணவர் கலந்தாய்வு நிகழ்ச்சி சென்னை எக்மோர் ஹோட்டல் மரினா டவர், கம்பர்ட் இன்னில் 18.09.2010 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். மாணவி ஷாபிரா பர்வின் இறைவசனங்களை ஓதினார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்கள் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பின் மூலம் இத்தகைய கல்வி உதவித்தொகையானது அமீரகத்தில் பணி செய்து கொண்டே ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியினால் கல்வி உதவி நிதி திரட்டப்படுகிறது. இதன் மூலம் இத்தகைய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக துஆச் செய்திட கேட்டுக் கொண்டார்.
ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ.முஹம்மது தாஹா அவர்கள் வரவேற்புரை மற்றும் ஈமான் அமைப்பு குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு இத்தகைய கல்வி உதவி நிதி வழங்குவதற்கு பின்புலமாக இருக்கக்கூடிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ஈமான் அமைப்பின் கல்விக் குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்ட ஈமான் அமைப்பின் அனைத்து நிர்வாகிகளின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
ஈமான் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் கீழக்கரை அல்ஹாஜ் எம்.கே.எஸ். அன்வர் முஹைதீன் மற்றும் காயல் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்த மாணாக்கர்களை கலந்தாய்வு செய்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரான வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் கல்வி விழிப்புணர்வு குறித்தும், ஈமான் கல்வி உதவித்தொகை மூலம் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் வசதியற்ற மாணவர்களை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில ஆலிம் அணி அமைப்பாளர் மவ்லவி எச். ஹாமித் பக்ரீ மன்பஈ அவர்கள் தனது துபாய் பயணத்தின் போது ஈமான் அமைப்பின் சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும், ஈமான் அமைப்பின் பணிகள் குறித்தும் பாராட்டினார்.
ஈமான் அமைப்பின் கல்வி உதவி மூலம் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை ஈமான் நிர்வாகிகள் வழங்கினர்.
சென்னை பீஸ் அமைப்பின் சலாஹுத்தீன், லால்பேட்டை இமாம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஈமான் அமைப்பின் கல்விச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா நிகழ்வினை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹம்மது முஸ்லிம், ஆடிட்டர் ஜாஹிர் உசேன், இஸ்மாயில் ஹாஜியார், பைசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
120 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஈமான் அமைப்பில் கல்விச்சேவையினைப் பாராட்டினர்.

Friday, May 15, 2009

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்


சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத் தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும் எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்


சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத் தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும் எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

Thursday, February 26, 2009

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் கல்வி சேவை

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் கல்வி சேவை

கல்வி உலக சமுதாய அறிவுக் கண்களை திறக்கச் செய்யும் திறவுகோல். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அல் குர் ஆன் 16.43 )

கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள். ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் கல்வி கற்பது கட்டாயக் கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது இஸ்லாம் கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது கல்வியறிவு இல்லாத எந்த சமுதாயமும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்ந்து சிறக்க முடியாது என்பதை அனுபவ பூர்வமாக கண்டு வருகிறோம்.

இஸ்லாம் கல்விக்கு கண் தந்த அரிய பொற்காலம் வெறும் நினைவு தூண்களாக காட்சி அளிக்கின்றன நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயங்களைவிட 200 வருடங்கள் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம் இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும் போது அதிகளவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் இடைக்காலத்தில் கல்வியைப் பற்றிய எந்தவித சிந்தனையும் கவலையும் இன்றியும் அது ஒரு அழியாச் செல்வம் என்பதை மறந்த நம்மில் பலர் சொத்து சேர்ப்பதிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

சீன தேசம் சென்றாகிலும் சீர்கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என உலக மனித குலத்தின் வாழ்வியல் ஆசானாகப் பிறந்த அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் இப்படி கல்விக்கு கண் தந்த இஸ்லாமிய வரலாற்றை ஒட்டியே தொடங்கப்பட்ட ஈமானின் கல்வித் திட்டம் முதல் ஆக்கமும் ஊக்கமளிக்கும் எந்த ஓர் திட்டங்களும் இறைத்தூதர்களின் வழியாகவும் தொடர்ந்து வருபவை என்கின்ற உண்மையை நாம் முதலில் தெளிவாக உணர வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழகம் வாழ்முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் மிகவும் பின் தங்கிய நிலைக்கு காரணம் கல்வியின்மை தான் என்ற உண்மையை உண்ர்ந்த வளைகுடா வாழ்க்கையின் அனுபவமும் தொலைநோக்கு சிந்தனையும் சமுதாய பற்றும் உள்ள எங்களது தனி மரியாதைக்குரிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் (MANAGING DIRECTOR E.T.A. ASCON GROUP OF COMPANIES) வளைகுடா நாடுகளில் வியர்வை சிந்த உழைக்கும் நம் சகோதரர்கள் ஆடம்பர வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் தன் பிள்ளைகள் தன் சகோதர சகோதரிகள் உறவினர்கள் ஆகியோரை கல்வி அறிவு பெற்றவர்களாகவும் பட்டதாரிகளாகவும் மாற்றுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் வாய்ப்பு வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் நம்மிடம் ஒரளவு இருந்தாலும் பெருவாரியான முஸ்லிம்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதுமில்லை என்ற தனது ஆதங்கத்தை பல சூழ்நிலைகளில் தெரியப்படுத்தியுள்ளார்கள்.1991 ஆண்டின் புள்ளியில் கணக்கெடுப்பு விபரப்படி 52.2% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2001 ஆண்டில் 65.38%ஆக உயர்வு அடைந்தது ஆனால் இதில் முஸ்லிம்கள் எழுத்தறிவு 59.1% மட்டுமே ஆகும்.

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்த ஈமான் நிர்வாகம் 1991 ஆம் ஆண்டு முதல் முயற்சியாக ஒரு மாணவிக்கு பொறியியல் கல்விக்கு உதவித்தொகை வழங்கியது இதன் தொடர்ச்சியாக வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் ஈமான் கல்விக்குழுவில் தந்தை என்று ஈமான் கல்விக்குழுச் சகோதரர்களால் கண்ணியத்துடன் போற்றப்படும் E.T.A அஸ்கான் நிறுவன குழுமத்தின் கார்ஸ் இணை நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் P.S.M ஹபீபுல்லாஹ் அவர்கள் தலைமை பொறுப்பேற்று வழிநடத்துவதுடன் ஈமான் கல்விப்பணியானது சமுதாய விடியலுக்கான ஆக்கப்பூர்வமான சேவை என்று உணர்ந்து அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான்,பொதுச்செயலாளர் அல்ஹாஜ் A. லியாக்கத் அலி, இவர்கள் ஊக்கமளித்து வந்ததன் காரணத்தால் இன்று வரை உயர் கல்வி பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! முன்னாள் பொதுச்செயலாளர் என்ற பொறுப்போடு கல்விப்பணியையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி காட்டிய அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் அவர்களின் சீரிய பணிகளுடன் முன்னாள் கல்விக்குழுச் செயலாளரும், இந்நாள் பொதுச்செயலாளருமான அல்ஹாஜ் A.லியாக்கத் அலி அவர்களின் இணைந்த அணுகு முறைகளுடன் கூடிய இவர்களின் சீரிய செயல்பாடுகள் ஈமானின் கல்விப்பணியில் தனி முத்திரையை பதித்தது என்றால் அது மிகையாகாது.

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் கல்விக்குழுச் செயலாளர் அல்ஹாஜ் A . லியாக்கத் அலி அவர்களின் வழியில் செயலாளர்கள் பொறுப்பில் நானும் A . முஹம்மது நூர்தீன் அவர்களும் சில வருடம் பணியாற்றி பின் பணி நிமித்தம் காரணமாக அமெரிக்கா சென்றவுடன் கல்விக்குழுச் செயலாளர்கள் பொறுப்பை நானும் U. முஹம்மது ஹிதாயத்துல்லா அவர்களும் ஏற்று செயல்பட்டு வருகிறோம்.

பல பொது இயக்கங்களும் கல்விப்பணி செய்வதை நாம் அறிந்திருக்கின்றோம் ஆனால் நமது ஈமான் கல்விப்பணியை துடிப்புடன் ஒரு இயக்கமாகவே நடத்தி செல்லும் விதம் அனைவர்களின் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது கல்விக்குழுச் சகோதரர்களுடன் தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி அதன் வெற்றிக்கு பெரும்பங்கு வகுத்த செயல்மிக்க முன்னாள் கல்விக்குழுச் செயலாளரும் ஈமானின் இன்றைய பொதுச் செயலாளருமாகிய அல்ஹாஜ் A . லியாக்கத் அலி அவர்கள் கல்விப் பித்தராகவே மாறி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான கல்வி தாகம் கொண்டவர்களாக எங்களைப் போன்றவர்களை இன்றும் வழிநடத்தி கல்வியில் மிகுந்த ஈடுபாடுடன் தன்னை முழுமையுடன் உண்மையாகவே அர்ப்பணித்து அதே போல் மற்றவர்களையும் கல்விக்குழுச் சேவையில் ஈடுபாடு கொள்ள தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்கள் அவர்கள் பொறுப்பில் இருந்த போது கல்விக்குழுப் பணிகளில் நடந்த சில சம்பவ நிகழ்வுகளை இந்த நேரத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈமான் கல்விச்சேவையில் துபாயில் வாழும் அனைத்து சகோதரர்களின் பங்கும் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் தொடர்ந்து பல அலுவல்களுக்கிடையே நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் சமுதாய உடன் பிறப்புகளின் இல்லங்களுக்குச் சென்று பொருள் திரட்டுகிற பணியை பொதுச்செயலாளர் அல்ஹாஜ் A . லியாக்கத் அலி துணைத்தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் இவர்களின் நேரடி செயல்பாட்டில் ஒரு குழுவாகவே செயலாற்றிய விதமானது சமுதாயத்தின் மீது நேரடியான அக்கறையும் முன்னேற்றமும் மற்ற சகோதரர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்ற முனைப்பே ஆகும் அவரோடு அக்குழுவில் ( நாங்கள் இருவர் உள்பட) காயல் யஹ்யா மொய்தீன்,நைனார்பாளையம் சாதிக் பாட்சா, லெப்பைக்குடிக்காடு படேஷா பஷீர், பசுபதி கோவில் முஹம்மது ரபீக், குத்தாலம் அஷ்ரப் அலி, முஹம்மது முஸ்லிம், தோப்புத்துறை முஹம்மது நூர்தீன், மற்றும் இஸ்மாயில் ஹாஜியார் போன்றவர்களின் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு மூலம் என்றென்றும் மறக்க முடியாத நெஞ்சங்களாக காட்சி அளிக்கிறார்கள் அந்த மதிப்பு மிக்க உதவித்தொகைகள் மூலம் இன்று வரை கல்வி பயின்று வெளியேறியுள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டி உள்ளது இதில்,

பொறியியல் துறைகளில் - 70
மருத்துவம் -25
தொழில் நுட்ப மற்றும்
பாலிடெக்னிக் துறைகளில் -40
கலை மற்றும் அறிவியல்
சார்ந்த படிப்புகள் -80
பிற துறை சார்ந்த படிப்புகள் -85

என்று பல துறைகளிலும் மாணவ, மாணவியர்கள் தடம் பதித்து உள்ளது சிறப்புக்குரியது இதில் ஊனமுற்ற மாணவர்களும் உடல் நலிவுற்று வசதி வாய்ப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகளும் உலமாக்கள் மற்றும் முஅத்தின் பிள்ளைகளும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு ஆண்டும் +2 பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற மேற்படிப்பைத் தொடர இயலாத ஏழை எளிய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டு அதற்கான உதவித்தொகை விண்ணப்பங்களும் இணைய தளம் / ஈமானின் மண்டல பிரதிநிதிகள் மூலம் அளிக்கப்பெற்று தேவையான சான்றிதழ்களுடன் கிடைக்கப்பெறுகிற விண்ணப்பங்கள் மாணவரின் மதிப்பெண் விபரங்கள் குடும்ப சூழ்நிலைகள் போன்ற விபரங்கள் கல்விக்குழுவின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பின் தகுதியானவர்களின் தேர்வு விபரங்கள் ஈமான் கல்விக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தாயக பிரதிநிதிகள் திருச்சி. ஜமால் முஹம்மது கல்லூரி முனைவர் பேராசிரியர் எம்.எம்.சாகுல் ஹமீது. மற்றும் சென்னை தொழில் அதிபர் கீழக்கரை அன்வர் மைதீன் ஆகிய கல்வி ஆர்வலர்களுக்கு அனுப்பப்பட்டு நேரடி தேர்வுகளுக்கு பின் அவர்களின் உண்மை நிலவரங்களும் அறியப்பட்டு அவர்களுக்கான உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாயகம் சென்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ். லியாக்கத் அலி அவர்கள் சென்னை மண்டல பிரதிநிதியுடன் நேர்முக தேர்வு நடைபெற்ற இடங்களுக்கு சென்று அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் மற்றும் மாணவ மாணவியர்களின் நேரடி விளக்கங்களை. மற்ற நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களின் ஏழ்மை மற்றும் சூழ்நிலைகள் காண்பவர்கள் கண்களில் செந்நீரை வரவழைக்கும் என்பதில் எந்தளவும் சந்தேகங்கள் இல்லை.

ஈமான் கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதங்கள் மற்ற ஈடுபாடுகள் வருகை பதிவுகள் போன்ற தகவல்கள் நேரடியாக கல்லூரியின் முதல்வர்கள் மூலம் கல்விக் குழுவிற்க்கு அளிக்கப்படுவதோடு அதன் அடிப்படையில் அவர்களுக்கு கல்விக்குழுத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் கல்விச் செயலாளர் முஹம்மது நூர்தீன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட மாணவர் நிலை அறியும் படிவம் ( IMAN STUDENT FEED BACK FORM ) அளிக்கப்பட்டு தொடர் உதவித் தொகைகள் மற்றும் சரியான ஆலோசனைகளும் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்ச்சி விகிதங்கள் மேம்பாடு அடைவதோடு இதன் மூலம் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் ஈமான் கல்விக்குழுவின் நேரடி பார்வையில் இருப்பதை அறிய முடிகிறது.

கல்விகுழுத் தலைவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப, ஈமான் மாணவ, மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் கடந்த 2002ஆம் ஆண்டில் முதன்முறையாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, மற்றும் அய்மான் பெண்கள் கல்லூரிகளிலும் அதனைத் தொடர்ந்து சென்னை கிரஸெண்ட் பொறியியல் கல்லூரியிலும் நடத்தப்பட்டது இதில் ஈமானின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் லியாக்கத் அலி, மற்றும் கல்விக்குழுச் செயலாளர்களும், அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத்துல்லா, தமிழக பிரதிநிதிகள் பேராசிரியர். எம்.சாகுல் ஹமீது பேரா. டாக்டர் பிலால், மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு கல்லூரிகளில் பயிலும் ஈமானின் மாணவ, மாணவிகளையும் சந்தித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள் சென்னையில் சமுதாய ஆட்டோ ஓட்டுநரின் கல்வி ஊக்கத்தொகைக்கான நேரடி வேண்டுகோளை பரிசீலனை செய்து உடன் அதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் செயல்படுத்திய விதங்களை எண்ணும்போது சமுதாயத்தின் வளர்ச்சியில் ஈமானின் கல்விப்பணிகள் நல்லதோர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனும் போது நமக்கு மனநிறைவு ஏற்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டில் ஈமானின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ். குத்தாலம் லியாக்கத் அலி அவர்கள் வேலூர் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியின் மாவட்ட விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு அங்கு பயின்று வரும் ஈமான் மாணவ, மாணவியர்களை சந்தித்து ஆலோசனைகளுடன் நல்ல பல அறிவுரைகளையும் வழங்கி வந்தார்கள்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் செயலாளர் என்ற முறையில் நானும், மற்றும் முஹம்மது நூர்தீன், இவர்களுடன் அல்ஹாஜ். அன்வர் மைதீன் ஆகியோரும் வேலூர் சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்குச் சென்று அங்கு பயின்று மென்பொருள் நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு தேர்வு பெற்று வேலைக்கான நியமன உத்தரவை பெற்ற ஈமான் உதவித்தொகை பெறும் மாணவியை வாழ்த்தியதோடு கால்லூரியின் தாளாளர் V.M.,லத்தீப் சாஹிப்,தலைவர் S. ஜியாவுத்தீன் அஹமது, மற்றும் கல்லூரி முதல்வர் ஜமீல் அஹமது ஆகியோருடன் இணைந்து மேலும் சிறந்து விளங்க நல்ல அறிவுரைகளை வழங்கி வந்தோம்.

ஈமான் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான உற்சாகம் அளிக்கும் விதமாக நமது சமுதாய கல்லூரிகள் சென்னை கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, திருச்சி M.I.E.T பொறியியல் கல்லூரி / பாலிடெக்னிக், மதுரை சேது பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி, வேலூர் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, ராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரி, கீழக்கரை தாஸீம் பீவி பெண்கள் கல்லூரி, திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி, ஈரோடு அல் அமீன் பாலிடெக்னிக், கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் போன்ற சமுதாய கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரத்யேகமாக அந்தந்த பாடப் பிரிவுகளுக்கேற்ப இடங்களை தந்து உதவுகிறார்கள். என்பதை இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறோம். சமுதாய கல்லூரி அல்லாது தகுதி அடிப்படையில் மற்ற கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் துணை மருத்துவம், பத்திரிகை துறை, இந்திய ஆட்சி பணிகளுக்கான துறையில் கல்வி பெறுபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது கல்விக்குழு தலைவர் P.S.M. ஹபிபுல்லாஹ், துணைத்தலைவர் அல்ஹாஜ். M. அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் அல்ஹாஜ்.A.லியாக்கத் அலி ஆகியோர்களின் ஆலோசனையின்படி கடந்த சில ஆண்டுகளாக சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களையும் வருடா வருடம் தேர்வு செய்து கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறச்செய்து மதநல்லிணக்கத்திற்கு ஈமானின் கல்வித்துறை ஒரு முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பெரிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டும் நமக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்ய வேண்டும் தமிழகத்தில் நமது சமுதாயத்தினரால் நடத்தப்படுகின்ற கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளும் உள்ளன. ஆனால் ஆரம்ப கல்வி அளிக்கும் தொடக்கப்பள்ளிகள் தேவையான அளவில் இல்லாதது குறையாகவே உள்ளது நம் சமுதாயத்திற்கென்று தொடக்கப்பள்ளிகள் போதிய அளவு ஏற்படுத்த சமுதாய கவலை கொண்டவர்கள் கூட்டாக செயல்படவேண்டும்.

சமுதாய வளர்ச்சியில் அக்கறையும் கவலையும் கொண்ட தனி மரியாதைக்குரிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ்.செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்கள் மற்றும் கல்விக்குழுத் தலைவர் அல்ஹாஜ். P.S.M ஹபீபுல்லாஹ் இவர்களின் ஆலோசனைப்படி ஈமான் அமைப்பின் கல்விப்பணியின் ஓர் சிறப்பு அங்கமாக இன்ஷா அல்லாஹ் தமிழகத்தின் மத்தியப்பகுதியான திருச்சியில் ஈமான் மேல்நிலைப்பள்ளி ஒன்றை தங்கும் விடுதி வசதியுடன் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் வாங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த சிறப்புமிக்க பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ். M. அப்துல் ரஹ்மான் , மற்றும் பலவகைகளிலும் தோளோடு தோள்நின்று ஒத்துழைப்பு அளித்து வரும் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ். குத்தாலம் ஏ.லியாக்கத் அலி , துணைத் தலைவர்கள் அல்ஹாஜ். எம். அப்துல் கதீம், அல்ஹாஜ். அஹமது முஹைதீன், பொருளாளர். அல்ஹாஜ். மீரா முஹைதீன், அல்ஹாஜ். S.M. பாரூக் சடையன் அமானுல்லா, யஹ்யா முஹையதீன், சாதிக் பாட்சா, முதுவை ஹிதாயத்துல்லாஹ், அனைவர் களையும் ஈமான் கல்விக்குழு நன்றியுடன் நினைவு கூறுகிறது. மென்மேலும் முன்னேற்றம் காண, சமுதாய பற்று கொண்ட ஆர்வலர்களையும், நற்சிந்தனை கொண்ட புரவலர்களையும் ஈமானின் கல்விக்குழு இத்தருணத்தில் அன்போடு நினைவு கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் ஈமானின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் வெற்றி பெற எங்களின் அவாவும் துவாவும்.

( ஈமான் அமைப்பின் முப்பதாம் ஆண்டு சிறப்பு மலர் 2006 )

www.imandubai.org

Wednesday, February 18, 2009

தேரிழந்தூரில் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்வி நிறுவ‌ன‌ம் அமைப்ப‌த‌ற்கான‌ ஆலோச‌னைக் கூட்ட‌ம்

தேரிழந்தூரில் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்வி நிறுவ‌ன‌ம் அமைப்ப‌த‌ற்கான‌ ஆலோச‌னைக் கூட்ட‌ம்


தேரிழ‌ந்தூரில் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்வி நிறுவ‌ன‌ம் அமைவ‌த‌ற்கான‌ ஆலோச‌னைக் கூட்ட‌ம் 20.02.2009 வெள்ளிக்கிழ‌மை காலை 9.30 ம‌ணிய‌ள‌வில் அர்ர‌ஹீமிய்யா அர‌பிக் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

கும்ப‌கோண‌ம் ந‌க‌ர‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஏ. ஜிர்ஜிஸ் த‌லைமை தாங்குகிறார். ஏ.ரூபியா கிராஅத் ஓதுகிறார்.

ஏ. அசர‌ப் அலி, ஏ.அப்துல் ஹை, ஏ.அப்துல் பாரி, ஏ. அப்துல் ர‌ஹீம், ஏ.ஹாஜா க‌மால், கே.எம்.பி. முஹ‌ம்ம‌து ச‌லீம் ம‌ற்றும் ஹெச். ஹ‌ஸ்புல்லாஹ் ஆகியோர் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.

இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ், முன்னாள் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் பி. க‌ல்யாண‌ம், ஒன்றிய‌ப் பெருந்த‌லைவ‌ர் கோ.சி. ம‌திய‌ழ‌க‌ன் உள்ளிட்டோர் சிற‌ப்பு அழைப்பாள‌ர்க‌ளாக‌ க‌ல‌ந்து கொள்கின்ற‌ன‌ர்.

ஏ. முஹ‌ம்ம‌து ர‌ஃபிக் ந‌ன்றியுரை நிக‌ழ்த்துகிறார்.

ச‌முதாய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு அரிய‌ ஆலோச‌னைக‌ளை வழ‌ங்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

கூட்ட‌த்திற்கான‌ ஏற்பாடுக‌ளை தேரிழ‌ந்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ம‌ற்றும் என்.ஆர்.இ. க‌ல்விக்குழு ஆகியோர் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

Sunday, February 8, 2009

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப். 7: வேளாண் பல்கலை. தொலைநிலைக் கல்வி மூலமாக வழங்கும் சான்றிதழ் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் பாடங்களை தொலைநிலைக் கல்வியில் வேளாண் பல்கலை. வழங்க உள்ளது.

பயிற்சிக் காலம் 6 மாதங்கள். ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இப் பாடங்களில் சேரலாம்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இயக்குநர், தொலைதூரக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை-641 003 என்ற முகவரியில் பெறலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 0422-6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கான நேரடிச் சேர்க்கை மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது என்றார்.

Monday, December 8, 2008

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, டிச. 8: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட, குரூப்-1 பிரதான எழுத்துத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி. மற்றும் கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 172 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரதான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு 349 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களின் பட்டியலை தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

எழுத்துத் தேர்வில், வினாத்தாள் குளறுபடி உள்ளிட்ட சில காரணங்களால் 30 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களுக்குத் தனியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றவர்களின் பட்டியலும் இத்துடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு குறித்த அழைப்புக் கடிதங்கள் தேர்வு பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், இத் தேர்வுகள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்

சென்னை, டிச.8: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு சிறப்பு மாதிரி நேர்காணலை ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் 348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சிறப்பு மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 97878 02927, 94442 19712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு "மாதிரி' நேர்காணல்

சென்னை, டிச.8: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு சிறப்பு மாதிரி நேர்காணலை ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் 348 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டிசம்பர் 26 முதல் ஜனவரி 3 வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ட்ராட்டஜி ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சிறப்பு மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 97878 02927, 94442 19712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Wednesday, June 11, 2008

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவ

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.

2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.

நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.

இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

Wednesday, April 30, 2008

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை

இணையதள முகவரி: www.educationsupport.nic.in

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது.

அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும், கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்யும் குழுவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
http://www.darulsafa.com

Regards
M.G. Fakrudeen
www.mypno.blogspot.com

Thursday, April 17, 2008

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய

கடைசி தேதி : 30-05-2008
.

Saturday, November 10, 2007

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

http://tmpolitics.blogspot.com/2007/11/urgent-urgent.html
www.tamilmuslimmedia.com

Please Forward to All immediately to get benefit from it.


முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.

இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.




சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007