துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0731-dubai-iman-holy-special-prayer.html#cmntTop
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித மிஹ்ராஜ் இரவினையொட்டி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஹிஜிர் 1429 ரஜப் பிறை 27 ( 29 ஜுலை 2008 செவ்வாய் மாலை ) இஷா தொழுகைக்குப் பின்னர் 9.00 மணியளவில் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்க இருக்கிறார்.
புளியங்குடி மௌலவி அல்ஹாஜ் அப்துல் காதர் ரஷாதி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இன்ஷா அல்லாஹ் வழக்கம்போல் பயானுக்குப் பின் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் கேட்டுக் கொள்கிறார். ( 050 58 53 888 )
பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.