துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கும் துபாய் நகரில் ஈமான் அமைப்பு அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அருளப்பெற்ற அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித மிராஜ் இரவையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடத்துகிறது.
இந்நிகழ்ச்சி துபை தேரா பகுதியில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்தப்படுகிறது.
ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தின் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி அல்ஹாஜ் எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ ‘’புனித மிராஜ் இரவு’ குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்புரைக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு பள்ளியின் மேல் தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ ஹமீது யாசின் 050 475 3052/042661415 ( மாலை 6 மணிக்கு மேல் ) ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தகவல் :
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்
050 5196433
No comments:
Post a Comment