Sunday, March 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.


சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி


தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888


http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com

Friday, March 21, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா



துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
இந்திய தூதரக அதிகாரி பி.எஸ். முபாரக் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு


துபாய் ஈமான் அமைப்பு 19.03.2008 புதன்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் மீலாதுப் பெருவிழாவினை நடத்தியது. இறைவசனஙகளுடன் துவங்கிய விழாவுக்கு பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி துவக்கவுரை நிகழ்த்தினார்.


மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி விழாப்பேருரை நிகழ்த்தினார். துபாய் இந்திய தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக், லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் எம். ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ, ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், இலங்கை புஷ்ரா ஆசிரியர் மௌலவி ஏ.எல். பதுறுத்தீன் ஷர்க்கி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழாவினையொட்டி பேச்சுப்போட்டியினை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது மொஹிதீன், அப்துல் ரஹ்மான், இந்தியா சில்க் ஹவுஸ் பங்குதாரர் அபுதாகிர் உள்ளிட்டோர் வழங்கினர்.

பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு :

பொதுமக்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் பெண்கள் தட்டிச்சென்றனர். அதன் விபரம் வருமாறு : எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் - சென்னை - துபாய் விமானச்சீட்டினை பாத்திமா ஹலீமாவும், இரண்டாம் பரிசினை ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச உமரா பயண வாய்ப்பை செய்யது ரிழ்வானாவும், மூன்றாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் 500 திர்ஹத்திற்கான பரிசுக் கூப்பனை கதீஜா நஸ்ரியாவும் பெற்றனர்.

மேலும் லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் அப்துல் வாஹிதுக்கும்,அல்ஹஸீனா வழங்கும் 200 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பன்களை ஹபிப் பாத்திமா, முத்து பீவி பாத்திமா, பாயிஸா ரஹ்மான், கிருஷ்ணமூர்த்தி, முஹியித்தீன், மஷ்ரிக் இண்டர்னேஷனல் வழங்கும் ஜெனார்ட் வாட்சினை ஜஸீலா ரியாஸ், முஹம்மது ரஸீம், ஜஹ்பர் சாதிக், ஹஸீனா அன்சாரி, இராஜவேல் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கான போட்டியில் பரிசுபெற்றவர்கள் ஆவர்.

ஆலிம்களுக்காக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் துபாய் சென்னை துபாய் விமானச்சீட்டு மௌலவி முஹம்மது ரபீக் பிலாலியும், இரண்டாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் வழங்கிய 500 திர்ஹம் பரிசுக் கூப்பனை மௌலவி ஹுசைன் மக்கியும் மூன்றாம் பரிசான அல்ஹஸீனா ஜுவல்லர்சின் 200 திர்ஹம் பரிசுக்கூப்பனை சர்புதீன் ஆலிமும் பெற்றனர்.

மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் 500 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பனை ரஃபீகா சாலிஹ், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் சித்தி ரஃபீகாவுக்கும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் 200 திர்ஹம் பரிசுக் கூப்பன் ஹஸீனா காத்தூன், வஸ்பி ஸஜ்ஜாத் இம்தியாஸ், ரஷீதா இப்றாஹிம், காதிரி ஸலீம், சில்மியா ஹபிப் ரஹ்மான், ஷமீஹா பர்வீன் உள்ளிட்டவர்களும் பரிசு பெற்றனர்.

கல்விக்குழு செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன், கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின், இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஷேக் மொஹிதீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத்

Thursday, March 13, 2008

துபாயில் ஈமான் அமைப்பின் மீலாது சொற்பொழிவு

http://thatstamil.oneindia.in/news/2008/03/07/world-melad-special-speech-programme-in-dubai.html
http://www.dinamalarbiz.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=391&Country_name=Gulf&cat=new

துபாயில் ஈமான் அமைப்பின் மீலாது சொற்பொழிவு
வெள்ளிக்கிழமை, மார்ச் 7, 2008



துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்), சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையுடன் இணைந்து துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் இன்று முதல் 18ம் தேதி வரை தொடர் மீலாது நபி சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தினசரி இஷா தொழுகைக்குப் பின் 9.00 மணி முதல் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு அழைப்பாளர் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இதில் அகிலத்தின் அருட்கொடையாய் இந்த அவனியில் அருளப்பட்ட அஹ்மது நபி (ஸல்) அவர்களின் அருமந்த வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050-475 30 52 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

சாதனையாளருக்கு பாராட்டு விழா


துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) 08.10.2007 திங்கட்கிழமை இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நிர்வாகி மெளலவி யு. முஹம்மது சலீம் சிராஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள் பற்றியும், வளர்ந்து விஞ்ஞான யுகத்தில் நம்மிடையே அமல்கள் குறைந்து வருவது குறித்து கவலை கொண்டு பேசினார்.
ஈமான் துணைத்தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் தனது நிறைவுரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமுதாயப்பணிகள் குறித்து விவரித்தார்.

நிகழ்ச்சியில் ஈமான் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம், கல்விக்குழுச் செயலாளர் முஹம்மது தாஹா, ஆடிட்டர் முஹம்மது •பாரூக், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.