துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) 08.10.2007 திங்கட்கிழமை இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நிர்வாகி மெளலவி யு. முஹம்மது சலீம் சிராஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள் பற்றியும், வளர்ந்து விஞ்ஞான யுகத்தில் நம்மிடையே அமல்கள் குறைந்து வருவது குறித்து கவலை கொண்டு பேசினார்.
ஈமான் துணைத்தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் தனது நிறைவுரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமுதாயப்பணிகள் குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் ஈமான் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம், கல்விக்குழுச் செயலாளர் முஹம்மது தாஹா, ஆடிட்டர் முஹம்மது •பாரூக், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment