Friday, April 25, 2008

துபாய் ஈமான் நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு 'ஆரோக்கிய அறிவியல்' எனும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி 25.04.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி முன்னிலை வகித்தார். விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

துபாய் பிரைம் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் காது,மூக்கு,தொண்டை நிபுணர் காயல் டாக்டர் பி.எம். செய்யது அஹ்மது மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். மேலும் காதை பட்ஸ் வைத்து காது குடைவதால் ஏற்படும் விபரீதம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.

'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ தனது உரையில் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் சமுதாய அமைப்பான ஈமான் அமைப்பின் சேவைகளைப் பாராட்டினார்.

டாக்டர் மாஹின் செய்யது இஸ்மாயில் பல் மருத்துவம் குறித்தும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல் மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்தார்.

ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், கல்விக்குழு செயலாளர் யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )











No comments: