Saturday, November 29, 2008

துபாய் ஈமான் சங்க 33 ஆம் ஆண்டு துவக்க விழா

துபாய் ஈமான் சங்க 33 ஆம் ஆண்டு துவக்க விழா

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/1207-iman-dubai-celeberate-33rd-anniversary.html

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1880&Country_name=Gulf&cat=new


துபாய் ஈமான் சங்கத்தின் (http://www.imandubai.org) 33 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பத்து மணி முதல் மாலை வரை மம்சார் பூங்காவில் நடைபெற இருப்பதாக ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.

துபாயில் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வமைப்பின் உதவியின் காரணமாக 500 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியினைக் கற்றுத் தேர்வு பெற்றுள்ளனர். தற்பொழுது 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வமைப்பின் உதவியின் மூலம் உயர்கல்வியினை கற்று வருகின்றனர். மேலும் துபாய் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை தமிழ் மக்களுக்காக செய்து வருகிறது ஈமான் சங்கம்.

டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் குடுமந்தினருடன் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்காக சிறப்பு பேருந்து வசதி தேரா பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் 050 7752737
முதுவை ஹிதாயத் 050 51 96433
காயல் யஹ்யா முஹியித்தீன் 050 5853888
கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712

No comments: