மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்
சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத் தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும் எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment