Thursday, June 11, 2009
துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம்
துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம்
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்தரங்கம் 11.06.2009 வியாழக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஹாபிஸ் பஷீர் அஹ்மத் இறைவசன்ங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் காக்கா தலைமை தாங்கினார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் அப்துல் ரஹ்மான் அவர்கள் மேற்கொண்ட சேவையினை நினைவு கூர்ந்தார்.
அல்ஹாஜ் சையத் எம். ஸலாஹூத்தீன் அவர்கள் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பு ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து கொள்வதற்காக பி.எஸ்.எம். அப்துல் காதர், முஹம்மது ஜலீல் உள்ளிட்ட பலரால் துவங்கப்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் ஈமான் என்றால் அப்துல் ரஹ்மான் என்று குறிப்பிடும்படியாக தனது சேவையின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர் அப்துல் ரஹ்மான். சகோதர சமுதாய மக்களது தேவையாக இருக்கட்டும், இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து அம்னெஸ்டி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட அப்துல் ரஹ்மான் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பரிணமிப்பார். அவர் தமிழக சமுதாய மக்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ஒரே குடையின் கீழ் பரிணமிக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது ஏற்புரையில் எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே என்றார். வேலூர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்ட நிலையினை எடுத்துரைத்த அவர் தனது வெற்றிக்காக மனமுருகி பிரார்த்தித்த அத்தனை நல்லுங்களுக்கும் தனது நன்றியினை வெளிப்படுத்தினார். நம்மையெல்லாம் வழிநட்த்திச் செல்லும் அல்ஹாஜ் சலாஹுத்தீன் காக்கா போன்றவர்களது ஒத்துழைப்பு, உற்சாகத்தின் காரணமாக இதுபோன்ற பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தர பிரார்த்திப்போம்.
எம்.பி.யாக இருந்தாலும் எப்போதும் போல் உங்களிட பணிபுரியக்கூடிய அப்துல் ரஹ்மானாகவே இருந்து வருவேன். இப்பதவியின் காரணமாக என்மீதுள்ள பொருப்புகள். சமுதாயம் என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இன்ஷா அல்லாஹ் எனது பணிகள் அமைய துஆச் செய்யுங்கள்.
நான் தவறு செய்தால் எனது தவறை சுட்டிக்காட்டி அதனைத் திருத்துங்கள். நன்றாகப் பணி செய்தால் உற்சாகப்படுத்துங்கள். உங்களில் நான் ஒருவன் என்றார்.
லெப்பைக்குடிக்காடு ஜமாஅத் அப்துல்லாஹ் பாஷா, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, அறந்தாங்கி பைசல், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் எஸ். சம்சுதீன், கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் உள்ளிட்டோர் தங்களது ஊர் ஜமாத்துகளின் சார்பிலும், அமீரக காயிதேமில்லத் பேரவை ஹமீதுர் ரஹ்மான், மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி, ஈமான் நிர்வாகிகள் எஸ்.எம். ஃபாரூக், எம். அப்துல் கத்தீம், ஸ்கை சீ பிரைட்டின் செய்யது எம். அப்துல் காதர், ஜமாஅத்துல் உலமா சபையின் தாவூத் அலி மன்பயீ, குவைத் பள்ளி இமாம் மவ்லவி காஜா முஹம்மது ஜமாலி மக்கீ மன்பயீ, எமிரேட்ஸ் இந்தியா பிரெடர்னிடி ஃபாரம் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊர் ஜமாஅத்தினர் சார்பாகவும், ஈமான் அமைப்பின் சார்பிலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கோட்டக்குப்பம் ஜமாஅத் சார்பில் அதன் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இனி வேலூர் எம்.பி. அவர்கள் ‘தாஜுல் மில்லத்’ என்றழைக்கப்படுவார் என்றார்.
ஈமான் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியினை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் தொகுத்து வழங்கினார்.
வாழ்த்தரங்கிற்கான ஏற்பாடுகள ஈமான் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், ஹமீதுர் ரஹ்மான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment