துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு அகிலத்திற்கோர் அருட்கொடையாய் இந்த அவனியில் அருளப்பெற்ற அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1430 ரஜப் பிறை 27, 19.07.2009 ஞாயிறு மாலை இஷாத் தொழுகைக்குப் பின் 9.30 மணிக்கு தெய்ரா பகுதியில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளியில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கூத்தாநல்லூ அஹ்மத் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்குகிறார். ஜனாப். அலி அஸ்கர் பிலாலி புனித மிஃராஜ் இரவு குறித்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
சொற்பொழிவைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்க ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா ( 050 467 4399 ) கேட்டுக் கொள்கிறார்.
கோட்டைப்பள்ளி
துபாய் கோட்டைப்பள்ளியில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் புனித மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி 19.07.2009 ஞாயிறு மாலை இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் புனித மிஃராஜ் இரவின் சிறப்புக்ள் குறித்து காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி, ஓ இனிய இளைய சமுதாயமே எனும் தலைப்பில் இலங்கை முஃப்தீ முஹம்மது யூசுப் ஹஜ்ரத், உத்திரபிரதேச மாநில இஸ்லாமிய அறிஞர் சையத் அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு 050 467 66 18
துபாய் சோனாப்பூர் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். தொழிலாளர் முகாம்
துபாய் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். தொழிலாளர் முகாம் பள்ளிவாசலில் 19.07.2009 ஞாயிறு மாலை மஃரிப் தொழுகைக்கு பின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி ஆலிம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார். மேலதிக விபரங்களுக்கு 050 795 9960
No comments:
Post a Comment