Tuesday, September 2, 2008

துபாய் ஈமான் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் பங்கேற்பு


















































































































துபாய் ஈமான் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் பங்கேற்பு

http://thatstamil.oneindia.in/news/2008/09/02/world-indian-consul-general-venu-rajamony-attends-dubai.html

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1086&Country_name=Gulf&cat=new

http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/??????-??????-??????-???????-??????-?????????

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு வருடந்தோறும் இஃப்தார் ( நோன்பு திறப்பு ) நிகழ்ச்சியினை துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ரமலான் மாதம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன் மூலம் தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர்.

செப்டம்பர் 1 ஆம் தேதி ( திங்கட்கிழமை) ரமலான் மாதம் துவங்கியதையடுத்து நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் பங்கேற்ற இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி இவ்வருடமும் தான் முதல் நபராக பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மக்களோடு மக்களாக நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த கன்சல் ஜெனரலை ஈமான் அமைப்பின் தலைவரும், துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குருப்பின் நிர்வாக இயக்குநருமான அல்ஹாஜ் சையது எம் ஸலாஹுத்தீன், கல்விக்குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ்,ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஹமீத் ஸலாஹுத்தீன், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், கல்விக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்சல் ஜெனரல் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்து வரும் இம்மாபெரும் பணியைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் நோன்புக் கஞ்சி காய்ச்சும் முறைகளையும், நோன்பு திறப்பதற்காக பள்ளியின் பல்வேறு பகுதிகளிலும் அமர்ந்திருந்த நோன்பாளிகளைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், யஹ்யா முஹியித்தீன், கீழக்கரை ஹமீது யாசின், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பொதுநல ஆர்வலர் ஜெயந்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments: