மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே
முதுகலை கல்வித் தகுதியைப் பதிவு செய்யலாம்
- வேலை வாய்ப்பு ஆணையர் தகவல்
http://files.periyar.org.in/viduthalai/20080820/news12.html
சென்னை, ஆக. 20- முதுகலை கல்வித் தகுதியைப் பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிற்கல்விப் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலேயே தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்த ஆவணங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சென்னையில் இருக்கும் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும். அந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, பதிவு அட்டை காலதாமதமின்றி தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய விரும்பினால் அதற்குரிய சான்றிதழின் நகல், பதிவு அட்டை நகல் ஆகியவற்றுடன் பதிவு அஞ்சல் மூலம் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். (முகவரி: உதவி இயக்குநர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 4).
No comments:
Post a Comment