Tuesday, June 9, 2009
துபை ஈமான் அமைப்பு வேலூர் பாராளுமன்ற உறுப்பினருக்கு நடத்தும் வாழ்த்தரங்கம்
துபை ஈமான் அமைப்பு வேலூர் பாராளுமன்ற உறுப்பினருக்கு நடத்தும் வாழ்த்தரங்கம்
துபை ஈமான் அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியினை 11.06.2009 வியாழக்கிழமை மாலை சரியாக 9.30 மணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
இவ்வாழ்த்தரங்கிற்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை தாங்க இருக்கிறார்.
இந்நிகழ்வில் தமிழகத்தின் அனைத்துப் பகுதியினைச் சேர்ந்த ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
மின்னஞ்சல் : iman1976@emirates.net.ae
இணையத்தளம் : www.imandubai.org / http://indianmuslimassociation.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Whether its Bollywood saree, Tollywood saree or sexy saree. All photos can be found at once place, called saree point. This website gives you latest saree photos and saree news. This Sari website has been divided into 3 parts. One gives latest Sari information and photos while the second section provides Bollywood saree information. While the third section have Sari Model photos and information.
Post a Comment