Friday, August 22, 2008

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே....

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே
முதுகலை கல்வித் தகுதியைப் பதிவு செய்யலாம்

- வேலை வாய்ப்பு ஆணையர் தகவல்

http://files.periyar.org.in/viduthalai/20080820/news12.html


சென்னை, ஆக. 20- முதுகலை கல்வித் தகுதியைப் பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிற்கல்விப் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலேயே தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

பதிவு செய்த ஆவணங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சென்னையில் இருக்கும் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும். அந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, பதிவு அட்டை காலதாமதமின்றி தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய விரும்பினால் அதற்குரிய சான்றிதழின் நகல், பதிவு அட்டை நகல் ஆகியவற்றுடன் பதிவு அஞ்சல் மூலம் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். (முகவரி: உதவி இயக்குநர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 4).

Saturday, August 16, 2008

துபாய் சோனாப்பூர் ஹெச்.ஆர்.எம். கேம்பில் நடந்த மீலாது விழா

துபாய் சோனாப்பூர் ஹெச்.ஆர்.எம். கேம்பில் நடந்த மீலாது விழா

ஆண்டு 2006

பங்கேற்றோர்

ஈமான் அமைப்பின் சிறப்பு அழைப்பாளர்

காயல்பட்டணம் மௌலவி அஹ்மது அப்துல் காதர் ஆலிம்























Thursday, August 14, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாயில் தமிழக முஸ்லிம்களின் சமுதாய அமைப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு எதிர்வரும் ஹிஜ்ரி 1429 ரபியுல் அவ்வல் பிறை 12 ( 19 மார்ச் 2008 ) புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா பகுதியில் உள்ள தமிழ் பஜாரில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.

மேலும் இலங்கை புஷ்ரா ( நற்செய்தி ) மாத இதழ் ஆசிரியர் மௌலவி ஏ.எல் பதுறுத்தீன் ஷர்க்கி பரலேவி, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் ஆயங்குடி மௌலவி எம்.ஏ. காஜா முஅஹ்ம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

மீலாத் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் தலைவர் சையத் எம் ஸலாஹுதீன், கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் துணைத்தலைவர்கள் அஹ்மது முகைதீன், அப்துல் கத்தீம்,அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செய்லாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின்,இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

விழா சிறப்புற நடைபெற இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அல் ஹஸீனா ஜுவல்லரி, ஈடிஏ அஸ்கான்,லேண்ட்மார்க் ஹோட்டல், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், ரஷாதி ஹஜ் சர்வீஸ், இந்தியா சில்க் ஹவுஸ், லியோன் டீ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல் : ஈமான் அமைப்பின் ஊடகத்துறை

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1429 ஷஅபான் பிறை 15, ஆகஸ்ட் 15,2008 வெள்ளி மாலை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் மஃரிபு தொழுகைக்குப் பின் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்யப்படும். முதலாம் யாசின் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிவிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்படும்

இரண்டாம் அமர்வு

வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ , மௌலவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்.

மேலும் வழக்கம்போல் பயானுக்குப் பின் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் கலந்து இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு : 16 ஆகஸ்ட் 2008 சனிக்கிழமை நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஈமான் விழாக்குழு

Monday, August 11, 2008

துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்

PRAVASI BHARATIYA SAMMAN விருது பெற்ற
ETA ASCON நிர்வாக இயக்குநருக்கு
துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்



துபை ஈமான் அமைப்பு மிகச் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியக்குடிமகனுக்கான PRAVASI BHARATIYA SAMMAN விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற ETA ASCON குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கு வாழ்த்தரங்கை 01.03.2007 வியாழன் மாலை துபை தேரா பகுதியில் அமையப்பெற்ற குவைத் பள்ளியில் ( லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் ) அரங்கேற்றியது.

துவக்கமாக மெளலவி அப்துல் மாலிக் அரூஸி இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் வாழ்த்தரங்கம் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார். மிகச்சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருது பெற்றதும் ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் இவ்விருது தனக்கு மட்டும் கிடைத்த விருதல்ல. தனது நிறுவனத்தில் பணிபுரியும் 45,000 பேர்களுக்கும் கிடைத்த விருது என்று கூறி தனது பெருந்தன்மையுடன் வெளிப்படுத்திய நிகழ்வை நினைவு கூர்ந்தார். அத்தகைய பெருமையுடையவர்க்கு மிகப்பெரிய அரங்கில் விழா நடத்த ஆவல் கொண்டு காக்காவை அணுகிய போது இறைவனின் இல்லமான பள்ளிவாசலிலேயே மிகவும் எளிமையாக நடத்தப்படுவதையே தான் விரும்புவதாகக் கூறியதையடுத்து இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். காக்கா அவர்கள் கல்வி, சமூக, சமுதாயப் பணிகளுக்காக செய்து வரும் உதவிகள் குறித்தும் விவரித்தார்.

ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் பொறியாளர் அல்ஹாஜ் எம் ஜே முஹம்மது இக்பால் தான் ETA நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு வரும்போது காக்கா அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார். மிகவும் எளிமையுடன் காணப்பட்ட காக்கா பற்றி பெருமிதம் கொண்டார்.

அனைத்து ஜமாஅத்கள் சார்பில் உரை நிகழ்த்திய லெப்பைக்குடிக்காடு அன்வர் பாஷா அவர்கள் ( Executive Director, ETA M&E Division, Dubai )
ETA நிறுவனம் துவங்கிய போது பணிக்குத் தெரிவு செய்ய்யப்பட்ட நூறு பேரில் 30 பேர் லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமீரக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி குத்புதீன், அபுதாபி அய்மான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹ¤சைன் சித்திக்கீ, குவைத் பள்ளி இமாம் மெளலவி காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தேசிய விருதாளர் புலவர் முஸ்தபா தனது உரையில் காக்கா அவர்களின் நேரந்தவறாமை குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் அறிவாளர், உழைப்பாளர், பண்பாளர் என்றார். தாய், தந்தையரின் சொற்களுக்கு பெரிதும் மதிப்பு கொடுத்து உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார். பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வந்தாலும் வளைகுடாவைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் தான் தாயகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பல்வேறு ஜமாஅத்தினரும் தங்களது ஊருக்குத் தேவையான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறித்து பெருமகிழ்வு அடைவதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களது பெருமையை உணர்ந்த அரசு அவர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தி அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் தான் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவை இன்னும் சிறப்புற ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தெரிவிக்க கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பு சார்பாகவும், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், காயல்பட்டணம், முதுகுளத்தூர், கோட்டக்குப்பம், வண்ணாங்குண்டு, கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நிறைவுரையாற்றினார். காயல்பட்டணம் மெளலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. தேரிழந்தூர் தாஜுதீனின் வாழ்த்து கீதமும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் ஈமான் சங்க நிர்வாகிகள், ETA ASCON நிறுவன ஊழியர்கள், பல்வேறு ஜமாஅத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.