சிவில் சர்வீசஸ் தேர்வு 2010
நாட்டின் மிக உயரிய அரசு நிர்வாகப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு,
முதனிலை (பிரிமிலினரி), முதன்மை (மெயின்) மற்றும் நேர்முகத்தேர்வு (இன்டர்வியூ) என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதனிலைத் தேர்வு மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதனிலைத்தேர்வில் பொது அறிவு, விருப்பப்பாடம் ஆகிய 2 தாள்கள் இடம்பெறும். பொது அறிவுக்கு 150 மதிப்பெண்களும், விருப்பப்பாடத்திற்கு 300 மதிப்பெண்களும் தரப்படுகிறது. கொள்குறி வினா (அப்ஜக்டிவ்)
வடிவில் இத்தேர்வு அமைகிறது.
முதனிலைத்தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப் பெண் உள்ளதை அவசியம் நினைவில் கொள்ளுங்கள். இத்தேர்வில் தகுதி பெற்றால்தான் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய மையங்
களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
பணி இடங்கள்: 965
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2010 அன்று, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.8.1980க்கு முன்போ 1.8.1989 தேதிக்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது.
வயது வரம்பு சலுகை: ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. உடல் ஊனமுற்றோருக்கு10 ஆண்டுகள் சலுகை தரப்படும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு எழுத வரம்பு: இத்தேர்வை ஒருவர் அதிகபட்சமாக நான்கு முறை எழுத முடியும். ஓ.பி.சி.,பிரிவினர் 7 முறை எழுதலாம். உடல் ஊனமுற்ற பொதுப்பிரிவினரும் 7 முறை எழுத முடியும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்காக யு.பி.எஸ்.சி., வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவம் தலைமை தபால் அலுவலகங்களில் வினியோகிக்கப்
படுகிறது. விண்ணப்படிவத்தின் கட்டணம் ரூ.20
இதுதவிர, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் ஆக மட்டுமே செலுத்த வேண்டும். தபால் அலுவலகங்களில் இதைப்பெற்று விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும். பின் கேன்சலிங் செய்து அதே தபால் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.பிரிவினர் விண்ணப்பக் கட்டணம்
செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
போஸ்டல் ஆர்டர், டி.டி., மணி ஆர்டர், செக், பணம் ஆகிய முறையில் கட்டணத்தை செலுத்தக் கூடாது.
No comments:
Post a Comment