2010க்கான ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்: தமிழக அரசு வேண்டுகோள்
சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் உடனடியாக சர்வதேச பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹஜ் விசா பெறுவதற்கு பயணிகள் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம் என சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளதாக மும்பை, இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஹஜ் 2010க்கு புனித பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் விண்ணப்பிக்கும்போது பன்னாட்டு பாஸ்போர்ட்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
ஹஜ் 2010க்கு புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்களிடம் பன்னாட்டு பாஸ்போர்ட் தற்போது இல்லாதிருப்பின் அதற்காக இப்போதே விண்ணப்பிக்க தயாராக வேண்டும்.
ஹஜ் 2010க்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம். இந்தக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி சர்வதேச பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment