Wednesday, December 17, 2008

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்

துபாயில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாயப் பணியில் ஈடுபட்டு சமுதாய அமைப்பு இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் என்றழைக்கப்படும் ஈமான் அமைப்பு.

ஈமான் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை ( 13-12-2008 ) மாலை துபாயில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கவிஞர் அப்துல் கத்தீம், அஹமது மைதீன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் ஹிஜிரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது, உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்துவது, தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களை அழைத்து மானுட வசந்தம் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அமீரக தேசிய தினத்தன்று மம்சார் பூங்காவில் நடைபெற்ற மாபெரும் நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் ஆண்டில் இந்நிகழ்வின் போது இன்னும் சிறப்புற பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் அஹமது மைதீன், செயலாளர்கள் தாஹா முஹம்மது, யஹ்யா முஹியித்தின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஈஸா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: