Wednesday, December 31, 2008

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
சிவந்தி அகாடமி நடத்துகிறது


திருச்செந்தூர், ஜன.1-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது.

குரூப்-1 தேர்வு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின், சார்பு அமைப்பான சிவந்தி அகாடமி மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டும் வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு குரூப்-1 துணை ஆட்சியாளர், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர், கிராமப்புற வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய 4 துறைகளில் உள்ள 82 காலியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (குரூப்-1 பணிக்குறியீடு எண் 001) எழுத்து தேர்வு நடத்த உள்ளது.

தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஆண்- பெண் அனைவரும் எழுதலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 12.4.09 தேதி அன்று எழுத்து தேர்வு நடைபெறும்.

இதுபற்றிய அறிவிப்பு http://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தா.நா.அ.ப.தே. (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்குப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 22.01.2009. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்புகள்

இந்தத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை சிவந்தி அகாடமி வரும் பிப்ரவரி மாதம் 14.2.2009-ம் தேதி முதல் 15.3.2009-ம் தேதி வரை திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டணம், சிவந்தி அகாடமி வளாகத்தில் நடத்த உள்ளது. இந்த வகுப்புகளுக்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 ஆகும்.

இந்த பயிற்சி வகுப்பில் பொது அறிவு பாடத்தில் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.

ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் துறைப் பேராசிரியர் டாக்டர் சி.ரமேஷ் பயிற்சி வகுப்புகளுக்கு இயக்குநராக செயல்படுவார்.

தங்கும் வசதி

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் ஆதித்தனார் கல்லூரி விடுதியிலும், பெண்கள் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி கட்டணம் ரூ.60 ஆகும்

விண்ணப்பம் பெ
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் விளக்கவுரையும், விண்ணப்பப் படிவமும் ரூ.40 செலுத்தி நேரிலோ அல்லது மணிஆர்டர் மூலமோ ரூ.50 செலுத்தி சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம் -628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியில் செலுத்தி பெற்று கொள்ளலாம். மணியார்டர் பாரத்தில் தகவலுக்கான இடம் பகுதியில் எந்த பயிற்சிக்கான விண்ணப்பப்பாரம் என்றும், முகவரியை பின்கோடுடனும், தொலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 6.2.2009 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் ரூ.2000-க்கான டிமாண்ட் டிராஃப்ட் (கனரா வங்கி /ஐ.ஓ.பி./ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா / இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விடுதிக்கான தொகை ரூ.1800 பயிற்சி வகுப்பின் முதல் நாள் 14.2.2009 அன்று செலுத்த வேண்டும்.

தொடர்புக்கு

இந்த பயிற்சி வகுப்புகள் சம்பந்தமாக மேலும் விபரம் பெற விரும்புவோர் சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் எப்.லடிஸ்லாஸ் ரொட்ரிகோ எம்.ஏ.எம்.பில் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04639-242998.

இந்த தகவலை சிவந்தி அகாடமி அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர், எப்.லடிஸ்லாஸ் ரொட்ரிகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments: