ஈமான் டைம்ஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் டைம்ஸ் கூகுள் குழுமம் துபாய் இந்திய முஸ்லிம் அசோஷியேஷனால் கடந்த 1997 ஜுன் மாதம் துவங்கப்பட்டது.
சமுதாயச் செய்திகளை உலகெங்கும் வாழ்ந்து தமிழக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இக்குழுமம் துவங்கப்பட்டது.
தமிழக முஸ்லிம் சகோதரரது இ மெயில் முகவரிகள் இக்குழுமத்தில் சேர்க்கப்படுகிறது. சிலரது முகவரிகள் அவர்களது நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்று இணைக்கப்பட்டது. சிலர் ஆர்வத்துடன் அவர்கள் தாங்களாகவே சேர்ந்து வருகின்றனர்.
அப்படி சேர்க்கப்பட்டதில் இதுவரை 2405 முகவரிகள் இக்குழுமத்தில் உள்ளன.இவற்றில் 157 இ முகவரிகள் மட்டும் பவுண்ஸ் ஆகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு மெயில் என்ற அடிப்படையில் அனுப்பப்படுகிறது. அவசியச் செய்திகள் இருப்பின் மேலும் ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. இதுவும் இக்குழும உறுப்பினர்கள் இக்குழுமத்தை செல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் கூறலாம்.
எனினும் எந்த ஒரு தனிமனிதரையோ அல்லது அமைப்பினையோ இக்குழுமம் குறை கூற பயன்படுத்தப்படுவது இல்லை. சமுதாயத்திற்குப் பயனுடைய செய்திகள், தகவல்கள் மட்டுமே இக்குழுமத்தில் இடம் பெறச் செய்யப்படுகிறது.
சமீபத்தில் தமிழ் வாசிக்கத் தெரியாத தமிழக நண்பர் ஒருவர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அவர் தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் தனது தமிழக நண்பர்களுக்கு அனுப்பட்டு வருவதாகவும், அவர்கள் மிகவும் உபயோகமாக இருப்பதாகவும் தெரிவித்ததாக கருத்து தெரிவித்தார்.
நமது குழும உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கீழ்க்கண்ட பிளாக்கரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவே இக்குழுமம் சிறப்பாக பயனளித்து வருகிறது என்பதற்கு சாட்சி.
http://indianmuslimassociation.blogspot.com/2008/06/blog-post_16.html
ஒரு சில உறுப்பினர்கள் குழுமத்திற்கு அனுப்பும் மடல்கள் இணைப்பாக அனுப்புவதால் அவற்றை பார்த்து குழுமத்திற்கு அனுப்புவதில் சிரமம் இருந்து வருகிறது. எனினும் நம்பிக்கையுடன் சில மடல்களை அனுப்பும் போது அத்தகவல்கள் தலைப்பில் குறிப்பிடப்பட்டமைக்கு மாற்றமாக இருந்து மாட்டிக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு.
மொத்தத்தில் இக்குழுமம் தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற உங்களது கருத்துக்கள், ஆலோசனைகள், தகவல்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு சிலர் தமிழ் வாசிக்கத் தெரியாமல் இருப்பினும் அவை குறித்து பதில் கிடைக்கப் பெற்று தங்களது கணினியில் சில மாற்றங்களைச் செய்து படித்து வருகின்றனர்.
தற்பொழுது சமுதாயத் தகவல்களைத் திரட்டி மாதம் இருமுறை இக்குழுமத்தில் தரலாம் என்பது ஒரு திட்டம். இதற்கு தங்கள் பகுதி நிகழ்வுகள், வஃபாத்து செய்திகள், கல்விச் செய்திகள் உள்ளிட்டவற்றை அனுப்பினால் அவையும் திரட்டி கொடுக்கப்படும். இதற்கு குழும உறுப்பினர்கள் ஒத்துழைப்பு இருப்பின் அவை தொடர்ந்து வழங்க ஏதுவாய் இருக்கும்.
மேலும் ஈமான் அமைப்பின் இணையத்தள வடிவமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சேவை அடிப்படையில் இணையத்தள வடிவமைப்பில் அனுபவம் உள்ளவர்கள் ஒத்துழைப்பு நல்கிட விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.
இக்குழுமம் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கி வரும் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், உலமாக்கள் உள்ளிட்ட அனைவரையும் நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
அனைவருக்கும் இனிய இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லாப் புகழும் இறைவனுக்கே
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ்ன் ( ஈமான் )
துபாய்
050 51 96433
muduvaihidayath@gmail.com
www.imandubai.org
http://indianmuslimassociation.blogspot.com
NOTE :
IF YOUR NOT ABLE TO READ TAMIL
Pl. make the settings in your computer.
pl. select VIEW - ENCODING - UNICODE
Now you will be able to read Tamil.
if you are facing any problems pl. contact muduvaihidayath@gmail.com
No comments:
Post a Comment