Pls send this web site your group
This web site Sinhala Language Islamic web Site www.yayuthumaga.com
Wednesday, January 28, 2009
Lady Finger for Diabtes
Shifa hospital Adirampattinam
to"Shifa Hospital, ARDA"
dateThu, Jan 29, 2009 at 7:19 AM
subjectLady Finger for Diabtes
Last month in one of TV program I learnt of a treatment of Sugar
(Diabetes). Since I am diabetic, I tried it and it was very useful and my
Sugar is in control now. In fact I have already reduced my medicine.
Take two pieces of Lady Finger (Bhindi) and remove/cut both ends of each
piece. Also put a small cut in the middle and put these two pieces in
glass of water. Cover the glass and keep it at room temperature during
night. Early morning, before breakfast simply remove two pieces of lady
finger (bhindi) from the glass and drink that water.
Keep doing it on daily basis.
Within two weeks, you will see remarkable results in reduction of your
SUGAR.
My sister has got rid of her diabetes. She was on Insulin for a few
years, but after taking the lady fingers every morning for a few months,
she has stopped Insulin but continues to take the lady fingers every
day. But she chops the lady fingers into fine pieces in the night, adds
the water and drinks it all up the next morning. Please. try it as it
will not do you any harm even if it does not do much good to you, but U
have to keep taking it for a few months before U see results, as most
cases might be chronic.

Saturday, January 24, 2009
தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு

பலஸ்தீன முஸ்லிம்களை பாதுகாக்க
அரபு லீக் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
தமிழ்நாடு உலமா நல வாரியம் அமைக்கவேண்டும்
தேர்தலுக்கான முஸ்லிம் லீக் பாராளுமன்ற குழு தேர்வு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தேசிய நிர்வாகிகள் கூட்ட முக்கிய தீர்மானங்கள்
சென்னை, ஜன. 18-
நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் 17ஃ01ஃ09 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கட்சியின் தேசிய தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஜில் 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை-1 என்ற முகவரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.
உத்திரபிரதேச மாநில தலைவர் மௌலானா கவ்ஸர் ஹயாத்கான் கூட்டத்தை துவக்கி வைத்து திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர். மீரட் இக்பால் அஹ்மத், தேசிய செயலாளர்களான கல்கத்தா ஷஹின்ஷா ஜஹாங்கீர். கேரளா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துஸ் ஸமத் ஸமதானி , பீகார் நயீம் அக்தர், டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பொருளாளர் கர்னாடகா தஸ்தகீர் ஆகா, டெல்லி டாக்டர் பஷீர் அஹமது, ஆந்திர மாநில தலைவர் காலித் ஜுபைதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார், பொருளாளர் வி.எம். சையது அஹ்மது, தமிழக சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்களான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், எச். அப்துல் பாசித் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
1) கட்சியில் இதுவரை தேசிய இணைச் செயலாளர்கள் என்ற பதவி தேசிய செயலாளர்கள் என மாற்றி அமைக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களில் தேசிய இணைச் செயலாளர்கள், தேசிய செயலாளர்கள் என அழைக்கப்படுவர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2) கட்சியின் தற்காலிக அலுவலகமாக எண் 81, ஆசாத் அப்பார்ட்மென்ஸ், 111 ஐ.பி. எக்ஸ்டன்சன், டெல்லி - 110092 என்ற முகவரியில் செயல்பட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3) கட்சியின் தேசிய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களை கட்சியின் வழக்குகள் மற்றும் அதிகாரப்ப+ர்வ பணிகளுக்கு தேவையான நேரங்களில் தேசிய தலைவர் அல்லது பொதுச் செயலாளர் ஆகியோர்களின் வழிகாட்டுதலுடன் பிரதிநிதியாக செயல்பட இக்கூட்டம் முடிவு செய்கின்றது.
4) எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ள கட்சியில் தேசிய பாராளுமன்ற குழு அமைப்பதென்றும், அக்குழுவுக்கு தேசிய தலைவர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹ்மத் (உ.பி) , கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே. குஞ்சாலி குட்டி, தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5) தேச விரோத மற்றும் பிரிவினை சக்திகளால் நாட்டில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் பரப்பப்பட்டு நாட்டில் அமைதியையும் சமய நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்ச்சிகளுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்த்து டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு எடுத்துவரும் சீரிய முயற்சிகளுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கும். அதே நேரத்தில், அப்பாவிகள் ஒருபோதும் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடாது என்பதனை இக்கூட்டம் கவனத்துடன் தெரி விக்கின்றோம். நாட்டில் எல்லா இன , மொழி, சமய மக்களிடத்திலும் அமைதி பாதுகாப்பு நிலைத்திட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மும்பை தீவிரவாத தாக்குதலில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்ப தோடு, இந்திய அரசாங்கத்தின் கருத்தை அனைத்துலக சமுதாயமும் ஏற்று தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து, உண்மை வெளிவர ஒத்துழைக்குமாறு இக்கூட்டம் வேண்டுகிறது. .
தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கக்கூடிய அதே வேளையில், மதவாத சக்திகளால் அரசியல் ஆதாயத்துக்காக ஏற்படுத்த நினைக்கும் போர் அபாய நிலை எந்த வகையிலும் நாட்டுக்கு நன்மை பயக்காது என்பதை இக்கூட்டம் கவனத்துடன் தெரிவிக்கின்றது.
6) தீவிரவாதத்தை எதிர்த்து கேரள மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தழுவிய அளவில் மாவட்ட, தாலுக்கா, பஞ்சாயத்து அளவில் கருத்தரங்குகள் பாதையாத்திரைகள் நடத்தப்பட்டு வருவதற்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவிப்பதோடு மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறது.
7) பாலஸ்தீன எல்லையான காஜா பகுதியில் இஸ்ராயில் ராணுவம் மேற்கொண்டு வரும் படுபாதக தாக்குதலுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, பாலஸ்தீன மக்களின் ப+ரண சுதந்திரத்திற்கு முழு ஆதரவை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
மஸ்ஜித் அக்ஸா வளாகத்திலிருந்து இஸ்ரேலிய தனிப்பாதுகாப்புப் படை உடனே வெளியேற கேட்டுக் கொள்கிறது. மனிதநேயமற்ற முறையில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் இஸ்ரேயில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு வரும் இக்காட்டுமிராண்டித் தனமாக தாக்குதலை உறுதியோடு, உணர்ச்சிப் ப+ர்வமாக அனைத்து அரபு நாடுகளும், உலக இஸ்லாமிய சமுதாயமும் ஒற்றுமையோடு எதிர்க்க வேண்டும் என இக்கூட்டம் வேண்டுகோள் வைக்கின்றது.
மனிதநேய மற்ற இஸ்ராயீல் அரசாங்கத்தால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் காஜா பகுதி பாலஸ்தீனர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் அரபு லீக் நாடுகள் ஒற்றுமையுடன் வழங்கும் என இக்கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கின்றது.
இந்திய அரசாங்கத்தால் இதுவரை காஜா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து அனைத்து விதமான உதவிகளையும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்கிட இந்திய அரசாங்கத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
8) இலங்கையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ்பேசும் அந்நாட்டு மக்களுக்கு சட்ட ப+ர்வமான அரசியல் தீர்வு ஏற்பட தொடர்ந்து இந்திய அரசாங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
அப்பாவி இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியில் சிறந்த முறையில் பணிகளாற்றி வரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது. இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில் இலங்கை ராணுவ தாக்குதலால் எந்த முடிவும் ஏற்பட போவதில்லை. இலங்கை சிறுபான்மை தமிழர்களின் துன்பத்திற்கும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
9) தமிழகத்தில் திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க. அரசாங்கத்திற்கு இக்கூட்டம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இது கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நல திட்டங்கள் மற்றும் முன்னேற்ற பணிகளுக்கு மக்கள் அளித்த தீர்ப்பாகும்.
தமிழக முதல்வரை பாராட்டுவதோடு, தமிழக அரசின் சமூக நல முன்மாதிரி திட்டங்களான
1) ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி ,
2) நிலமற்ற விவசாயிகளுக்கு இலவச நிலம்
3) விவசாய கடன் தள்ளுபடி
4) சிறுபாண்மையினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் சமூகத்தில் பின்தங்கிய ஏழை சிறுபான்மை யினர் மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கான உதவிகள். உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை மற்ற மாநிலங்களும் ஏற்று செயலாற்றிட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
10) தமிழகத்தில் மஸ்ஜிதுகள், மதராசாக்கள், தர்காக்கள் மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் சமூக கொடுமைகளிலிருந்து விடுபடும் முயற்சியாக நாட்டில் அமைதி, சமய நல்லிணக்கம் நிலைக்க பணியாற்றிவரும் சுமார் 15 ஆயிரம் உலமாக்களுக்கு அடிப்படை தேவைகளான உரிய சம்பளம், ஓய்வ+தியம் உள்ளிட்டவைகள் வழங்கிட """" தமிழ்நாடு உலமா நல வாரியம்|| அமைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
11) இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டு நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் குழு அறிக்கை அளித்திருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு இக்கூட்டம் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் குழு அறிக்கையை உடனே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அக்குழு பரிந்துரை செய்திருக்கும் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டதிருத்தத்தை கொண்டுவர வேண்டுமென இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சினை
ராணுவ நடவடிக்கை மூலம் எந்த பலனும் ஏற்படாது
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது பேட்டி
சென்னை. ஜன.18
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி இ.அகமது கூறினார்.
இ.ய+.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின் கட்சியின் தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியுமான இ.அகமது, பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி., ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
இ.அஹமது பேட்டி
கூட்டம் முடிந்த பிறகு மத்திய மந்திரி இ.அகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில்
தேசிய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்தும், பாராளுமன்ற தேர்தல், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். இதேபோல், கேரளாவில் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியிலேயே இருப்போம். கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் 3 வது கூட்டணி அமைக்க சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வது, மதவாத பா.ஜ.க. கட்சிக்கு சாதகமாக போய்விடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேராமல் எந்த கட்சியும் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது. 3 வது அணி அமைத்தால் அது காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்துவதுடன் பா.ஜ.க.வுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துவிடும். எனவே, 3வது அணி அமைப்பது என்பது மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கு சமம்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வுகாண முடியாது. பேச்சு வார்த்தை நடத்தித்தான் தீர்வு காணமுடியும். அதற்குத் தேவையான முயற்சி களை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இலங்கைக்கு சென்றுள்ளார் அவர் இந்தியா திரும்பிய பின்னரே, அவர் பேசிய விவரங்கள் குறித்து தெரிய வரும்.
இவ்வாறு மத்திய மந்திரி அகமது கூறினார்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பேட்டி
பொதுச்செயலாளர் பேராசிரியர் காதர் முகைதீன், எம்.பி. பேசும்போது:
ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில், வருகிற 31ந் தேதி நடக்கிறது. இதில் 11 ஆயிரம் உலாமாக்கள் கலந்துகொள்கிறார்கள். தென் மண்டல மாநாடு 24ந் தேதி ராமநாதபுரத்திலும், பிப்ரவரி 14ந் தேதி தஞ்சாவ+ரில் மத்திய மண்டல மாநாடும், மார்ச் 14 ந் தேதி வேலூரில் வடமண்டல மாநாடும் நடைபெறும் இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., கூறினார்.
முஸ்லிம் லீகில் துரோகிகளுக்கு இடமில்லை
தேசிய தலைவர் இ.அஹமது திட்ட வட்ட அறிவிப்பு
சென்னை, ஜன.18-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டம் 17.01.2009 அன்று சென்னை காயிதே மில்லத் மன்ஜிலில் நடைபெற்றபோது தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது பேசியதாவது,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்றபின் சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும் இந்த சிறப்புமிகு காயிதே மில்லத் மன்ஜிலுக்கு வருகை தந்து தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்துவதிலே நான் மிகவும் ப+ரிப்படைகின் றேன். என் மாணவப் பருவத்திலேயே முஸ்லிம் லீகில் இணைந்து பணிகளை துவங்கிய காலம் முதல் பல்வேறு பொறுப்புக்களை வகித்து வந்தாலும் 1968 ஆம் ஆண்டு கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் அவர்களின் அழைப்பை ஏற்று முதல் முறையாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த கட்டிடத்திற்கு நான் வந்தேன். அன்று சமுதாயத்தின் மிகப்பெரும் தலைவர்களெல்லாம் அமர்ந்திருந்த அந்த அவையில் கேரள மாநில அமைப்பு பொதுச்செயலாளர் என்ற அளவில் நான் அன்று பார்வையாளராக அமர்ந்திருந்தேன் அக் காலக்கட்டத்தில் காயிதே மில்லத் அவர்களுடைய பேச்சுக்களை பொதுக் கூட்டங்களில் மொழிப் பெயர்ப்பாளனாக நான் செயலாற்றி வந்திருக்கின்றேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்தான் இன்று நம்மை வழிகாட்டும் நெறிமுறைகளாக இருந்து வருகின் றது.
அரசியல் பயணம்
இன்று நான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக பொறுப்பேற்று இருந்தாலும் கூட காயிதே மில்லத் போன்ற தலைவர்களிடமிருந்த சிறப்பம்சங்களை நாம் எதையும் பெறமுடியாது. நான் உங்களில் ஒருவனாக உங்களோடு இணைந்து பணியாற்ற கூடியவனாகதான் பொறுப்பேற்று இருக்கின்றோம்.
முஸ்லிம் லீகின் அரசியல் பயணத்தை நாம் தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டும் கடந்த 2008 செப்டம்பர் 14 ம் தேதி தேசிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பின் கட்சியின் முடிவுகளை அனைவரும் இணைந்து பணியாற்றி வருகின்றோம். .
பாராளுமன்ற தேர்தல்
நாட்டில் விரைவில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பங்கும் பணிகளும் குறித்து தேசிய நிர்வாகிகள் தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறோம். கேரளா, தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மேற்குவங்காளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் முஸ்லிம்கள் குவியலாக வாழக்கூடிய தொகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு நான் தெரிவிப்பதெல்லாம், தேர்தலில் நாம் போட்டியிடுவதற்கு முன்பாக அத்தொகுதிகளில் முஸ்லிம் லீகின் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து பொதுமக்களின் ஆதரவை பெறவேண்டும். அப்பொழுதுதான் நாம் போட்டியிடுவதில் அர்த்தம் இருக்கின்றது, ஒரு சில ஆயிரம் ஓட்டுக்கள் மட்டும் நாம் பெறுவதால் எதையும் சாதித்துவிட முடியாது. மதசார்பற்ற சக்திகளின் ஓட்டுக்களை நாம் பிரிப்பதால் எந்த பயனும் இல்லை. முஸ்லிம் லீகின் பலத்தை நிரூபித்து மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலமே சமுதாயத்தின் உரிமைக் குரலை நிலைநிறுத்த முடியும். இதனை அனைத்து மாநில நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதல் இந்திய நாட்டிற்கு விடப்பட்ட சவால் ஆகும். இத் தாக்குதலுக்கு நாம் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம். நாம் இந்த நாட்டின் மைந்தர்கள், இந்த நாட்டின் உயிரோடும், உணர்வோடும் இணைந்தவர்கள். நம்மை எந்த சக்தியாலும் இந்நாட்டிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் தலைவர் காயிதே மில்லத் அவர்கள், காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை பிரகடனப்படுத் திருக்கின்றார்கள். ஐக்கிய நாட்டு சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக முஸ்லிம் லீகின் ஊழியனாக இருக்கக் கூடிய நான் பங்கேற்று உரையாற்றக்கூடிய பாக்கியத்தினை பெற்றேன். அங்கும் நம் கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கின்றோம்.
முஸ்லிம் லீகில்
துரோகிகளுக்கு இடமில்லை
இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற பெயரால் சிலர் குழப்பம் செய்து வருகின்றனர். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயர்வுக்காக உண்மையாக உழைப்பவர்களே அதன் தலைவர்கள். தாவ+த் மியாகான் போன்ற யாராலும் முஸ்லிம் லீகின் ஸ்திரத்தன்மையை அசைத்துவிட முடியாது. குழப்பம் விளைவிப்பவர்களை சமுதாயம் இனம்கண்டு கொள்ளும். குழப்பம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்ப+ர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளராகவும் தமிழக தலைவராகவும் சிறப்பான முறையில் பணி களாற்றி வரக்கூடிய என் இனிய நண்பர் பேராசிரியர் காதர்மொகிதீன் சாஹிப் அவர்களை பாராட்டுகிறேன். அவர் தேசிய அள வில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார், கட்சியை அகில இந்திய அளவில் வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இணைந்து செயலாற்றி வருகின்றோம். தமிழகத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வகையிலும், தமிழக முதலமைச்சர் அவரே வியந்து பாராட்டக்கூடிய வகையிலும் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டினை பேராசிரியர் காதர் மொகிதீன் நடத்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிடும் தமிழக முஸ்லிம் லீக் நண்பர்களுக் கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக முஸ்லிம் லீக் சாதனை
ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் முஸ்லிம் லீகின் நிலை வேறு, இன்று ஏற்பட்டி ருக்கும் வளர்ச்சிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை கட்சிக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. அன்று நமக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதி கிடைத்தபோது, அங்கு நம் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? என்ற அச்ச உணர்வு ஏற்பட்டதனால் தான் அன்று நாம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதன்பின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், பஞ்சாயத்து உறுப்பினர்களையும் நாம் பெற்று தமிழகத்தில் பெயர் சொல்லக்கூடிய அளவில் அரசியல் சக்தி யாக வளர்ந்து வருகின் றோம். பாராளுமன்ற உறுப்பினராக தி.மு.க. சின் னத்தில் வெற்றி பெற்றிருந் தாலும், அக்கட்சி நமக்கு எந்த நிர்பந்தத்தையும் தர வில்லை. பாராளுமன்றத்தில் உள்ளேயும் வெளியி லும் பேராசிரியர் காதர்மொகிதீன் முஸ்லிம் லீக் தலைவராகவே செயல்பட்டு வருகின்றார். இருந்தபோதிலும் வருகின்ற தேர்தலில் நம் கட்சியின் சார்பாகவே போட்டியிடும் அளவுக்கு நாம் அரசியல் சக்தியாக வளர்ந்து இருக்கின்றோம்.
முஸ்லிம் லீக் மாநாடுகள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பணிகள் தேசிய அளவில் முடுக்கிவிடப்பட்டு பல்வேறு மாநிலங்களில் மாநாடு, பாதயாத்திரை பொதுக் கூட்டங்கள் என பணி களை விரிவுபடுத்தியிருக்கின்றோம். நானும் பொதுச்செயலாளர் காதர் மொகிதீன் சாஹிபும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரவாத எதிர்ப்பு பாதயாத்திரைகள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் பிப்ரவரி 7ம் தேதி மாநில மாநாடும், அகில இந்திய அளவிலான மாநாட்டை உத்திரப்பிரதேச மாநிலம் முரதா பாத்தில் நடத்திட அந்த மாநில தலைமையை கேட்டிருக்கின்றோம்.
முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்காக அனைத்து மாநில, மாவட்ட, நகர ஊழியர்களும் அரும் பணியாற்ற வேண்டுகிறேன்.
இவ்வாறு தேசியத் தலைவர் இ. அஹமது தலைமை உரையாற்றினார்.
தென்காசி ரயில் நிலையத்தில்
மத்திய அமைச்சர் இ.அஹமது, பேராசிரியர்,
நிர்வாகிகளுககு உற்சாக வரவேற்பு
தென்காசி, ஜன.18-
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி ரயில் நிலையத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது, தேசிய பொதுச்செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார், மாநிலப் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அஹமது, சட்டமன்ற உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹப+ப், இளைஞர் அணி அமைப்பாளர் நிஜாமுதீன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட் டது.
தென்காசி - மதுரை ரோடு இலத்தூரில் அல்-ஹிதாயா பெண்கள் ஆசிரிய பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்புவிழா மற்றும் முஸ்லிம் லீகின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள் நெல்லை வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு இன்று காலை தென்காசி ரயில் நிலையத்தில் பச்சிளம் பிறைக்கொடி தாங்கிய நூற்றுக்கணக்கான முஸ்லிம் லீகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்த னர்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத் தலைவர் கோதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர்கள் எல்.கே. எஸ். மீரான், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக் கோவில் செய்யது பட்டாணி, சம்சுல் ஆலம், ஜே. சாகுல் ஹமீது, ரவண சமுத்திரம் ஆர். எம். சாகுல் ஹமீது, மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட துணைச் செயலாளர்கள் கடையநல்லூர் ஹைதர் அலி, முதலியார்பட்டி பஸ்லுர் ரஹ்மான், தென்காசி முஹம்மது ஹ{சைன், வி.கே.புரம் கானகத்தி மீரான், தென்காசி நகரத் தலைவர் அப்துல் மன்னான், செய லாளர் அப்துல் காதர், பொருளாளர் அப்துல் காதர், ரியாத் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்கள் என்.ஏ. முஹம்மது கோயா, டி.கே. சாகுல் ஹமீது, பி.டி. ஹஸ்புல்லா, டி.ஏ. செய்யது மசூது, தென்காசி கோட்டாட்சி தலைவர் சண்முக நாதன், துணைத் தலைவர் இப்ராஹீம், புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் இஸ்மாயீல், மேலப்பாளையம் நகராட்சி தலைவர் முகைய தீன் அப்துல் காதர், வீரநல்லூர் நகரச் செயலாளர் சேகு ஒலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாகத் அலி, புளியங்குடி அப்துல் ரஹீம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அணி திரண்டு நாரே தக்பீர் அல்லாஹ{ அக்பர், முஸ்லிம் லீக் ஜிந்தாபாத், அஹமது சாஹிப் ஜிந்தா பாத், முனீருல் மில்லத் ஜிந்தாபாத் உள்ளிட்ட உற்சாகமான கோஷங்களை எழுப்பி ஆரவாரமான வரவேற்பளித்து ஏராளமான வாகனங்கள் சூழ அழைத்து சென்றனர்.
தென்காசி ரயில் நிலையமே பச்சிளம் பிறைக் கொடியால் பசுமையாய் காட்சியளித்தது.
தகவல்- புளியங்குடி ஷாகுல் ஹமீது
தென்காசி ரயில் நிலையத்தில் தேசிய தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர்முகைதீன் எம்.பி.,மற்றும் நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
பாமரன் பதில்கள்
பி.ஏ. முஹம்மது அலி, இராஜகிரி
விமான விபத்தில் நாம் இழந்த அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா அவர்களுக்கு அறிஞர்கள் எப்போதாவது புகழஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த விஞ்ஞானியின் சிறப்பியல்புகளைச் சொல்லுங்களேன்...?
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மானித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909ல் பிறந்தவர்.குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது.எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த ‘தியரி’யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது.1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா ‘விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்’ என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.
31 வயதில் ‘மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி’ விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும். Atomic Explosion, Production of Isotopes, Purification of Uranium முதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தை இவர்.
நாடு சுதந்திரமடைந்ததும் Atomic Research Centre ஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார். இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது. 1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்),ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்),கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின. இந்தியாவிலேயே தோரியம்,புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.
அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் ‘பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்’ ( Bhabha Atomic Research Centre ) எனப் பெயரிடப்பட்டது.
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இவர் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே!
நன்றி :
இனிய திசைகள் மாத இதழ்
ஜனவரி 2009
FOR MORE INFORMATION ABOUT HOMI JAHANGIR BHABHA
http://www.dae.gov.in/bhabha.htm
http://www.4to40.com/legends/index.asp?id=164
Mohd Segu Yussuf
dateSun, Feb 8, 2009 at 2:48 PM
subjectRe: அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா - Not a Muslim, but Parsi
Dear brother,
AAWR
We shouldnot be misguided by wrong information as such Homi Jahangir Bhaba is a Parsi not a Mulslim, anyhow he is a great scientist.
Pl read the lik of Two Bhabas both are from Parsi community.
http://en.wikipedia.org/wiki/Homi_K._Bhabha
Homi K. Bhabha (born 1949) is an Indian theorist of Post-colonialism. He currently teaches at Harvard University where he is the Anne F. Rothenberg Professor of English and American Literature and Language and Director of the Humanities Center .
Bhabha was born into a Parsi family from Mumbai, India. He is an alumnus of St. Mary's High School (ISC,1967-68), Mazagoan, Mumbai . He graduated with a B.A. from Elphinstone College at the University of Mumbai (formerly University of Bombay) and a M.A. and D.Phil. from Christ Church, Oxford University.
http://www.iloveindia.com/indian-heroes/homi-bhabha.html
Sathak
dateSat, Feb 7, 2009 at 4:45 PM
subjectRE: [AIMAN Times] அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
Dr. Homi Jahanghir Bhabha was a parsi and not a muslim.
Regards,
Sathakathulla
SAGE Support Team Lead,
S. A. Alrajhi Holding Co.,
Riyadh -11593,Kingdom of Saudi Arabia
Tel.: 01-4712333 Ext.: 233, Fax: 4712666
Mobile:0508178360
NKA
dateSat, Feb 7, 2009 at 7:29 PM
subjectRe: அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
Dear Iman forum members,
Salaams. There seems to be a slight confusion about the ethnicity and religion of Homi Jehangir Bhabha.
Bhabha was born in Bombay to Jehangir Hormaji Bhabha , an Oxford-educated barrister, and Meherbai Framji Panday, a wealthy Parsi family living in Bombay, India. Bhabha, at his birth, was directly linked to India's most prominent mercantile families.[1] Through his mother, Bhabha was the great-grandson of Sir Dinshaw Maneckji Petit, a textiles entrepreneur noted for his philanthropic efforts,[2] and therefore distantly related by marriage to Muhammad Ali Jinnah through his second wife, Rattanbai Petit, who was the elder Petit's granddaughter. Through his father, Bhabha was the grandson of Hormusji Bhabha, CIE, the Inspector-General of Education in Mysore, and the nephew of Meherbai Hormusji, who was married to Dorab Tata, the eldest son of Jamsetji Tata.[1] He is also a distant relative of similarly named post-colonial theorist Homi K Bhabha.[3]
All the facts given in the mail below under "Paamaran Badilgal" are accurate except the concluding inference that he (Homi Bhabha) was a muslim, is not true and may be misleading.
Just for the record. Ref: http://en.wikipedia.org/wiki/Homi_J._Bhabha.
Wasalam,
Alaudeen N. K. @ Bangkok
baburazack@yahoo.com
dateSun, Feb 8, 2009 at 5:33 PM

Dear Sirs,
Eventhough it is given in your source document that Mr.Bhabha born into a wealthy Parsi family, please try to give always correct information to our community.
Thank you for the oppurtunity.
Babu I Razack A.K
Bhabha was born on October 30, 1909, into a wealthy Parsi family. He had a good library of science books at home and even as a child was interested in science. He used to spend his spare time in painting and writing poetry. He was also fond of music, particularly the Western classics. His father's ambition was to train Bhabha as an engineer and he was sent abroad for higher studies. However, his interest shifted to physics. During his studies abroad he won many medals and fellowships. He also got the opportunity to work with eminent physicists like Enrico Fermi and Wolfgang Pauli.

Thursday, January 22, 2009
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு

உங்கள் வாழ்வில் நீங்கள் உயர்நிலை அடைய வேண்டுமா ?
குடும்ப வாழ்வு உங்களுக்குத் தகுந்ததாக அமைந்ததா ?
உன்னதமான உறவுகள் உண்மையாக நீடித்தனவா ?
இஸ்லாமிய ஆய்வு வெளிச்சத்தில் உங்கள் உணர்வுகள் புதுப்பிக்கப்படட்டும்.
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு ஹிஜிரி 1430, ஸபர் பிறை 4 ( 30.01.2009 ) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அல் நஹ்தா பகுதியில் உள்ள சென்ட்ரல் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
மனித வள மேம்பாட்டுக்கு உதவிடும் இச்சிறப்பு நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் சிங்கப்பூர் பெரோஸ் கான் குடும்ப உறவின் அவசியம் குறித்த உரையினை வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம்.
நபர் ஒன்றுக்கு கட்டணம் திர்ஹம் 20
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வருகையினை 050 58 53 888 / 050 2533712 / 050 7752737 / 050 51 96 433 ஆகிய எண்களில் முன்பதிவு செய்யலாம்.
www.imandubai.org
www.indianmuslimassociation.blogspot.com

Sunday, January 18, 2009
B.S. Abdur Rahman Crescent Engineering College given status "Deemed-to-be-University'

Submitted by admin2 on 16 January 2009 - 11:26pm.
Indian Muslim
By TwoCircles.net news desk,
http://www.twocircles.net/2009jan16/b_s_abdur_rahman_crescent_engineering_college_given_status_deemed_be_university.html_0
New Delhi: Established in 1984 B.S. Abdur Rahman Crescent Engineering College was today declared deemed-to-be-university by the Central Government.
As a consequence of the new status the name of the institute will change to B.S. Abdur
Rahman Institute of Science & Technology. It will continue to be affiliated to Anna University, Chennai but it can award degrees and start new courses. Current students will get their degrees from Anna University.
Crescent Engineering College was established as a Muslim minority college by All India Islamic Foundation that runs several other colleges and schools in Tamil Nadu. The foundation works in the field of education "with special attention to technical education to the educationally, socially and economically backward communities and weaker sections of the society."
As part of the new status of the Crescent College, All India Islamic Foundation will transfer the ownership and management of the college to "B.S. Abdur Rahman Institute of Science & Technology Society" setup especially to run the deemed university.
Crescent College currently offers degrees in BE, BTech, ME, and PhD in various engineering disciplines. Crescent College is regarded as one of the best engineering college in Tamil Nadu.
Link:
http://www.crescentcollege.org/

Wednesday, January 14, 2009
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 10 மணி வரை துபாய் அல் தவார் பகுதியில் ஸ்டார் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியின் துவக்கமாக சிங்கப்பூர் பெரோஸ்கான் அவர்களது குடும்ப உறவுகள் உரையும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியினை ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
நிகழ்ச்சிக்கான கட்டணம் திர்ஹம் 20 சிற்றுண்டி உட்பட.
குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்கலாம்.
முதலில் பதிவு செய்யும் நூறு பேருக்கு மட்டுமெ பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
முன்பதிவு செய்ய
தொடர்பு எண்கள்
காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 5853 888
மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் 050 77 52 737
கீழக்கரை ஹமீது யாசின் 050 25 33 712
முதுவை ஹிதாயத் 050 51 96 433
மேலதிக விபரம் பெற
http://www.imandubai.org
http://indianmuslimassociation.blogspot.com/

Thursday, January 8, 2009
உயர்கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு நடவடிக்கை:கல்லூரிகளுக்கு தர அங்கீகாரம் கட்டாயம்

பல்கலைக்கழக மானியக்குழு புதிய உத்தரவு
சென்னை, ஜன.9-
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தர அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய உத்தரவை விரைவில் பிறப்பிக்க உள்ளது.
உயர் கல்வி நிலை
இந்தியாவில் 417 பல்கலைக்கழகங்களும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்து விட்டு உயர்கல்விக்கு செல்கிறார்கள். இந்த எண்ணிக்கையை குறைந்தபட்சம் 12 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.
தர அங்கீகாரம் கட்டாயம்
உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் அதே வேளையில் கல்வியும் தரமாக இருக்க வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) ஏ, ஏ பிளஸ், பி பிளஸ் என்று பல்வேறு நிலைகளில் தர அங்கீகாரம் (அக்ரெடிட்டேஷன்) வழங்கி வருகிறது. இந்த தர அங்கீகாரத்தை வைத்து அந்த கல்வியின் மதிப்பு கூடுகிறது.
இப்போது, கல்வி நிறுவனங்கள் தர அங்கீகாரம் பெறுவது கட்டாயமில்லை. அவற்றின் விருப்பதைப் பொறுத்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தர அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் யு.ஜி.சி. விரைவில் புதிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.
உதவித்தொகை நிறுத்தப்படும்
இதுபற்றிய அறிவிப்பு இன்னும் 3 மாதத்தில் வெளியிடப்படும். நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் தர அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி உடனடியாக நிறுத்தப்படும் என்று யு.ஜி.சி. தலைவர் சுகதேவ் தோரட் அறிவித்திருக்கிறார். தற்போது 24 சதவீதம் கல்லூரிகளும், 30 சதவீத பல்கலைக்கழகங்களும் மட்டுமே தர அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உத்தரவின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் 3 ஆண்டுகளில் நாக் உள்ளிட்ட ஏதாவது ஒரு தர அமைப்பிடமிருந்து தர அங்கீகாரம் பெற வேண்டும். கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதி, தரமான ஆசிரியர்கள், ஆராய்ச்சி வசதி, விடுதி வசதி உள்பட பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தர அங்கீகாரச்சான்று வழங்கப்படும். நிதி உதவி பெறாத கல்வி நிறுவனங்களுக்கு மேற்கண்ட வசதிகளை மேம்படுத்திக்கொள்ள யு.ஜி.சி. ஒருதடவை நிதி உதவி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)