Saturday, January 24, 2009

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு

பலஸ்தீன முஸ்லிம்களை பாதுகாக்க
அரபு லீக் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
தமிழ்நாடு உலமா நல வாரியம் அமைக்கவேண்டும்
தேர்தலுக்கான முஸ்லிம் லீக் பாராளுமன்ற குழு தேர்வு

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தேசிய நிர்வாகிகள் கூட்ட முக்கிய தீர்மானங்கள்


சென்னை, ஜன. 18-
நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் 17ஃ01ஃ09 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கட்சியின் தேசிய தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஜில் 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை-1 என்ற முகவரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.
உத்திரபிரதேச மாநில தலைவர் மௌலானா கவ்ஸர் ஹயாத்கான் கூட்டத்தை துவக்கி வைத்து திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர். மீரட் இக்பால் அஹ்மத், தேசிய செயலாளர்களான கல்கத்தா ஷஹின்ஷா ஜஹாங்கீர். கேரளா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துஸ் ஸமத் ஸமதானி , பீகார் நயீம் அக்தர், டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பொருளாளர் கர்னாடகா தஸ்தகீர் ஆகா, டெல்லி டாக்டர் பஷீர் அஹமது, ஆந்திர மாநில தலைவர் காலித் ஜுபைதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார், பொருளாளர் வி.எம். சையது அஹ்மது, தமிழக சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்களான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், எச். அப்துல் பாசித் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
1) கட்சியில் இதுவரை தேசிய இணைச் செயலாளர்கள் என்ற பதவி தேசிய செயலாளர்கள் என மாற்றி அமைக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களில் தேசிய இணைச் செயலாளர்கள், தேசிய செயலாளர்கள் என அழைக்கப்படுவர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2) கட்சியின் தற்காலிக அலுவலகமாக எண் 81, ஆசாத் அப்பார்ட்மென்ஸ், 111 ஐ.பி. எக்ஸ்டன்சன், டெல்லி - 110092 என்ற முகவரியில் செயல்பட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3) கட்சியின் தேசிய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களை கட்சியின் வழக்குகள் மற்றும் அதிகாரப்ப+ர்வ பணிகளுக்கு தேவையான நேரங்களில் தேசிய தலைவர் அல்லது பொதுச் செயலாளர் ஆகியோர்களின் வழிகாட்டுதலுடன் பிரதிநிதியாக செயல்பட இக்கூட்டம் முடிவு செய்கின்றது.
4) எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ள கட்சியில் தேசிய பாராளுமன்ற குழு அமைப்பதென்றும், அக்குழுவுக்கு தேசிய தலைவர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹ்மத் (உ.பி) , கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே. குஞ்சாலி குட்டி, தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5) தேச விரோத மற்றும் பிரிவினை சக்திகளால் நாட்டில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் பரப்பப்பட்டு நாட்டில் அமைதியையும் சமய நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்ச்சிகளுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்த்து டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு எடுத்துவரும் சீரிய முயற்சிகளுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கும். அதே நேரத்தில், அப்பாவிகள் ஒருபோதும் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடாது என்பதனை இக்கூட்டம் கவனத்துடன் தெரி விக்கின்றோம். நாட்டில் எல்லா இன , மொழி, சமய மக்களிடத்திலும் அமைதி பாதுகாப்பு நிலைத்திட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மும்பை தீவிரவாத தாக்குதலில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்ப தோடு, இந்திய அரசாங்கத்தின் கருத்தை அனைத்துலக சமுதாயமும் ஏற்று தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து, உண்மை வெளிவர ஒத்துழைக்குமாறு இக்கூட்டம் வேண்டுகிறது. .
தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கக்கூடிய அதே வேளையில், மதவாத சக்திகளால் அரசியல் ஆதாயத்துக்காக ஏற்படுத்த நினைக்கும் போர் அபாய நிலை எந்த வகையிலும் நாட்டுக்கு நன்மை பயக்காது என்பதை இக்கூட்டம் கவனத்துடன் தெரிவிக்கின்றது.
6) தீவிரவாதத்தை எதிர்த்து கேரள மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தழுவிய அளவில் மாவட்ட, தாலுக்கா, பஞ்சாயத்து அளவில் கருத்தரங்குகள் பாதையாத்திரைகள் நடத்தப்பட்டு வருவதற்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவிப்பதோடு மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறது.
7) பாலஸ்தீன எல்லையான காஜா பகுதியில் இஸ்ராயில் ராணுவம் மேற்கொண்டு வரும் படுபாதக தாக்குதலுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, பாலஸ்தீன மக்களின் ப+ரண சுதந்திரத்திற்கு முழு ஆதரவை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
மஸ்ஜித் அக்ஸா வளாகத்திலிருந்து இஸ்ரேலிய தனிப்பாதுகாப்புப் படை உடனே வெளியேற கேட்டுக் கொள்கிறது. மனிதநேயமற்ற முறையில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் இஸ்ரேயில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு வரும் இக்காட்டுமிராண்டித் தனமாக தாக்குதலை உறுதியோடு, உணர்ச்சிப் ப+ர்வமாக அனைத்து அரபு நாடுகளும், உலக இஸ்லாமிய சமுதாயமும் ஒற்றுமையோடு எதிர்க்க வேண்டும் என இக்கூட்டம் வேண்டுகோள் வைக்கின்றது.
மனிதநேய மற்ற இஸ்ராயீல் அரசாங்கத்தால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் காஜா பகுதி பாலஸ்தீனர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் அரபு லீக் நாடுகள் ஒற்றுமையுடன் வழங்கும் என இக்கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கின்றது.
இந்திய அரசாங்கத்தால் இதுவரை காஜா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து அனைத்து விதமான உதவிகளையும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்கிட இந்திய அரசாங்கத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
8) இலங்கையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ்பேசும் அந்நாட்டு மக்களுக்கு சட்ட ப+ர்வமான அரசியல் தீர்வு ஏற்பட தொடர்ந்து இந்திய அரசாங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
அப்பாவி இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியில் சிறந்த முறையில் பணிகளாற்றி வரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது. இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில் இலங்கை ராணுவ தாக்குதலால் எந்த முடிவும் ஏற்பட போவதில்லை. இலங்கை சிறுபான்மை தமிழர்களின் துன்பத்திற்கும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
9) தமிழகத்தில் திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க. அரசாங்கத்திற்கு இக்கூட்டம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இது கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நல திட்டங்கள் மற்றும் முன்னேற்ற பணிகளுக்கு மக்கள் அளித்த தீர்ப்பாகும்.
தமிழக முதல்வரை பாராட்டுவதோடு, தமிழக அரசின் சமூக நல முன்மாதிரி திட்டங்களான
1) ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி ,
2) நிலமற்ற விவசாயிகளுக்கு இலவச நிலம்
3) விவசாய கடன் தள்ளுபடி
4) சிறுபாண்மையினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் சமூகத்தில் பின்தங்கிய ஏழை சிறுபான்மை யினர் மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கான உதவிகள். உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை மற்ற மாநிலங்களும் ஏற்று செயலாற்றிட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
10) தமிழகத்தில் மஸ்ஜிதுகள், மதராசாக்கள், தர்காக்கள் மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் சமூக கொடுமைகளிலிருந்து விடுபடும் முயற்சியாக நாட்டில் அமைதி, சமய நல்லிணக்கம் நிலைக்க பணியாற்றிவரும் சுமார் 15 ஆயிரம் உலமாக்களுக்கு அடிப்படை தேவைகளான உரிய சம்பளம், ஓய்வ+தியம் உள்ளிட்டவைகள் வழங்கிட """" தமிழ்நாடு உலமா நல வாரியம்|| அமைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
11) இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டு நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் குழு அறிக்கை அளித்திருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு இக்கூட்டம் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் குழு அறிக்கையை உடனே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அக்குழு பரிந்துரை செய்திருக்கும் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டதிருத்தத்தை கொண்டுவர வேண்டுமென இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை
ராணுவ நடவடிக்கை மூலம் எந்த பலனும் ஏற்படாது
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது பேட்டி

சென்னை. ஜன.18
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி இ.அகமது கூறினார்.
இ.ய+.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின் கட்சியின் தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியுமான இ.அகமது, பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி., ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
இ.அஹமது பேட்டி
கூட்டம் முடிந்த பிறகு மத்திய மந்திரி இ.அகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில்
தேசிய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்தும், பாராளுமன்ற தேர்தல், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். இதேபோல், கேரளாவில் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியிலேயே இருப்போம். கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் 3 வது கூட்டணி அமைக்க சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வது, மதவாத பா.ஜ.க. கட்சிக்கு சாதகமாக போய்விடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேராமல் எந்த கட்சியும் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது. 3 வது அணி அமைத்தால் அது காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்துவதுடன் பா.ஜ.க.வுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துவிடும். எனவே, 3வது அணி அமைப்பது என்பது மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கு சமம்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வுகாண முடியாது. பேச்சு வார்த்தை நடத்தித்தான் தீர்வு காணமுடியும். அதற்குத் தேவையான முயற்சி களை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இலங்கைக்கு சென்றுள்ளார் அவர் இந்தியா திரும்பிய பின்னரே, அவர் பேசிய விவரங்கள் குறித்து தெரிய வரும்.
இவ்வாறு மத்திய மந்திரி அகமது கூறினார்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பேட்டி
பொதுச்செயலாளர் பேராசிரியர் காதர் முகைதீன், எம்.பி. பேசும்போது:
ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில், வருகிற 31ந் தேதி நடக்கிறது. இதில் 11 ஆயிரம் உலாமாக்கள் கலந்துகொள்கிறார்கள். தென் மண்டல மாநாடு 24ந் தேதி ராமநாதபுரத்திலும், பிப்ரவரி 14ந் தேதி தஞ்சாவ+ரில் மத்திய மண்டல மாநாடும், மார்ச் 14 ந் தேதி வேலூரில் வடமண்டல மாநாடும் நடைபெறும் இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., கூறினார்.


முஸ்லிம் லீகில் துரோகிகளுக்கு இடமில்லை
தேசிய தலைவர் இ.அஹமது திட்ட வட்ட அறிவிப்பு
சென்னை, ஜன.18-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டம் 17.01.2009 அன்று சென்னை காயிதே மில்லத் மன்ஜிலில் நடைபெற்றபோது தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது பேசியதாவது,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்றபின் சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும் இந்த சிறப்புமிகு காயிதே மில்லத் மன்ஜிலுக்கு வருகை தந்து தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்துவதிலே நான் மிகவும் ப+ரிப்படைகின் றேன். என் மாணவப் பருவத்திலேயே முஸ்லிம் லீகில் இணைந்து பணிகளை துவங்கிய காலம் முதல் பல்வேறு பொறுப்புக்களை வகித்து வந்தாலும் 1968 ஆம் ஆண்டு கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் அவர்களின் அழைப்பை ஏற்று முதல் முறையாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த கட்டிடத்திற்கு நான் வந்தேன். அன்று சமுதாயத்தின் மிகப்பெரும் தலைவர்களெல்லாம் அமர்ந்திருந்த அந்த அவையில் கேரள மாநில அமைப்பு பொதுச்செயலாளர் என்ற அளவில் நான் அன்று பார்வையாளராக அமர்ந்திருந்தேன் அக் காலக்கட்டத்தில் காயிதே மில்லத் அவர்களுடைய பேச்சுக்களை பொதுக் கூட்டங்களில் மொழிப் பெயர்ப்பாளனாக நான் செயலாற்றி வந்திருக்கின்றேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்தான் இன்று நம்மை வழிகாட்டும் நெறிமுறைகளாக இருந்து வருகின் றது.
அரசியல் பயணம்
இன்று நான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக பொறுப்பேற்று இருந்தாலும் கூட காயிதே மில்லத் போன்ற தலைவர்களிடமிருந்த சிறப்பம்சங்களை நாம் எதையும் பெறமுடியாது. நான் உங்களில் ஒருவனாக உங்களோடு இணைந்து பணியாற்ற கூடியவனாகதான் பொறுப்பேற்று இருக்கின்றோம்.
முஸ்லிம் லீகின் அரசியல் பயணத்தை நாம் தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டும் கடந்த 2008 செப்டம்பர் 14 ம் தேதி தேசிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பின் கட்சியின் முடிவுகளை அனைவரும் இணைந்து பணியாற்றி வருகின்றோம். .
பாராளுமன்ற தேர்தல்
நாட்டில் விரைவில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பங்கும் பணிகளும் குறித்து தேசிய நிர்வாகிகள் தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறோம். கேரளா, தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மேற்குவங்காளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் முஸ்லிம்கள் குவியலாக வாழக்கூடிய தொகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு நான் தெரிவிப்பதெல்லாம், தேர்தலில் நாம் போட்டியிடுவதற்கு முன்பாக அத்தொகுதிகளில் முஸ்லிம் லீகின் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து பொதுமக்களின் ஆதரவை பெறவேண்டும். அப்பொழுதுதான் நாம் போட்டியிடுவதில் அர்த்தம் இருக்கின்றது, ஒரு சில ஆயிரம் ஓட்டுக்கள் மட்டும் நாம் பெறுவதால் எதையும் சாதித்துவிட முடியாது. மதசார்பற்ற சக்திகளின் ஓட்டுக்களை நாம் பிரிப்பதால் எந்த பயனும் இல்லை. முஸ்லிம் லீகின் பலத்தை நிரூபித்து மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலமே சமுதாயத்தின் உரிமைக் குரலை நிலைநிறுத்த முடியும். இதனை அனைத்து மாநில நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதல் இந்திய நாட்டிற்கு விடப்பட்ட சவால் ஆகும். இத் தாக்குதலுக்கு நாம் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம். நாம் இந்த நாட்டின் மைந்தர்கள், இந்த நாட்டின் உயிரோடும், உணர்வோடும் இணைந்தவர்கள். நம்மை எந்த சக்தியாலும் இந்நாட்டிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் தலைவர் காயிதே மில்லத் அவர்கள், காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை பிரகடனப்படுத் திருக்கின்றார்கள். ஐக்கிய நாட்டு சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக முஸ்லிம் லீகின் ஊழியனாக இருக்கக் கூடிய நான் பங்கேற்று உரையாற்றக்கூடிய பாக்கியத்தினை பெற்றேன். அங்கும் நம் கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கின்றோம்.
முஸ்லிம் லீகில்
துரோகிகளுக்கு இடமில்லை
இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற பெயரால் சிலர் குழப்பம் செய்து வருகின்றனர். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயர்வுக்காக உண்மையாக உழைப்பவர்களே அதன் தலைவர்கள். தாவ+த் மியாகான் போன்ற யாராலும் முஸ்லிம் லீகின் ஸ்திரத்தன்மையை அசைத்துவிட முடியாது. குழப்பம் விளைவிப்பவர்களை சமுதாயம் இனம்கண்டு கொள்ளும். குழப்பம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்ப+ர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளராகவும் தமிழக தலைவராகவும் சிறப்பான முறையில் பணி களாற்றி வரக்கூடிய என் இனிய நண்பர் பேராசிரியர் காதர்மொகிதீன் சாஹிப் அவர்களை பாராட்டுகிறேன். அவர் தேசிய அள வில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார், கட்சியை அகில இந்திய அளவில் வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இணைந்து செயலாற்றி வருகின்றோம். தமிழகத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வகையிலும், தமிழக முதலமைச்சர் அவரே வியந்து பாராட்டக்கூடிய வகையிலும் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டினை பேராசிரியர் காதர் மொகிதீன் நடத்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிடும் தமிழக முஸ்லிம் லீக் நண்பர்களுக் கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக முஸ்லிம் லீக் சாதனை
ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் முஸ்லிம் லீகின் நிலை வேறு, இன்று ஏற்பட்டி ருக்கும் வளர்ச்சிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை கட்சிக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. அன்று நமக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதி கிடைத்தபோது, அங்கு நம் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? என்ற அச்ச உணர்வு ஏற்பட்டதனால் தான் அன்று நாம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதன்பின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், பஞ்சாயத்து உறுப்பினர்களையும் நாம் பெற்று தமிழகத்தில் பெயர் சொல்லக்கூடிய அளவில் அரசியல் சக்தி யாக வளர்ந்து வருகின் றோம். பாராளுமன்ற உறுப்பினராக தி.மு.க. சின் னத்தில் வெற்றி பெற்றிருந் தாலும், அக்கட்சி நமக்கு எந்த நிர்பந்தத்தையும் தர வில்லை. பாராளுமன்றத்தில் உள்ளேயும் வெளியி லும் பேராசிரியர் காதர்மொகிதீன் முஸ்லிம் லீக் தலைவராகவே செயல்பட்டு வருகின்றார். இருந்தபோதிலும் வருகின்ற தேர்தலில் நம் கட்சியின் சார்பாகவே போட்டியிடும் அளவுக்கு நாம் அரசியல் சக்தியாக வளர்ந்து இருக்கின்றோம்.
முஸ்லிம் லீக் மாநாடுகள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பணிகள் தேசிய அளவில் முடுக்கிவிடப்பட்டு பல்வேறு மாநிலங்களில் மாநாடு, பாதயாத்திரை பொதுக் கூட்டங்கள் என பணி களை விரிவுபடுத்தியிருக்கின்றோம். நானும் பொதுச்செயலாளர் காதர் மொகிதீன் சாஹிபும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரவாத எதிர்ப்பு பாதயாத்திரைகள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் பிப்ரவரி 7ம் தேதி மாநில மாநாடும், அகில இந்திய அளவிலான மாநாட்டை உத்திரப்பிரதேச மாநிலம் முரதா பாத்தில் நடத்திட அந்த மாநில தலைமையை கேட்டிருக்கின்றோம்.
முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்காக அனைத்து மாநில, மாவட்ட, நகர ஊழியர்களும் அரும் பணியாற்ற வேண்டுகிறேன்.
இவ்வாறு தேசியத் தலைவர் இ. அஹமது தலைமை உரையாற்றினார்.

தென்காசி ரயில் நிலையத்தில்
மத்திய அமைச்சர் இ.அஹமது, பேராசிரியர்,
நிர்வாகிகளுககு உற்சாக வரவேற்பு

தென்காசி, ஜன.18-
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி ரயில் நிலையத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது, தேசிய பொதுச்செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார், மாநிலப் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அஹமது, சட்டமன்ற உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹப+ப், இளைஞர் அணி அமைப்பாளர் நிஜாமுதீன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட் டது.
தென்காசி - மதுரை ரோடு இலத்தூரில் அல்-ஹிதாயா பெண்கள் ஆசிரிய பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்புவிழா மற்றும் முஸ்லிம் லீகின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள் நெல்லை வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு இன்று காலை தென்காசி ரயில் நிலையத்தில் பச்சிளம் பிறைக்கொடி தாங்கிய நூற்றுக்கணக்கான முஸ்லிம் லீகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்த னர்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத் தலைவர் கோதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர்கள் எல்.கே. எஸ். மீரான், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக் கோவில் செய்யது பட்டாணி, சம்சுல் ஆலம், ஜே. சாகுல் ஹமீது, ரவண சமுத்திரம் ஆர். எம். சாகுல் ஹமீது, மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட துணைச் செயலாளர்கள் கடையநல்லூர் ஹைதர் அலி, முதலியார்பட்டி பஸ்லுர் ரஹ்மான், தென்காசி முஹம்மது ஹ{சைன், வி.கே.புரம் கானகத்தி மீரான், தென்காசி நகரத் தலைவர் அப்துல் மன்னான், செய லாளர் அப்துல் காதர், பொருளாளர் அப்துல் காதர், ரியாத் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்கள் என்.ஏ. முஹம்மது கோயா, டி.கே. சாகுல் ஹமீது, பி.டி. ஹஸ்புல்லா, டி.ஏ. செய்யது மசூது, தென்காசி கோட்டாட்சி தலைவர் சண்முக நாதன், துணைத் தலைவர் இப்ராஹீம், புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் இஸ்மாயீல், மேலப்பாளையம் நகராட்சி தலைவர் முகைய தீன் அப்துல் காதர், வீரநல்லூர் நகரச் செயலாளர் சேகு ஒலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாகத் அலி, புளியங்குடி அப்துல் ரஹீம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அணி திரண்டு நாரே தக்பீர் அல்லாஹ{ அக்பர், முஸ்லிம் லீக் ஜிந்தாபாத், அஹமது சாஹிப் ஜிந்தா பாத், முனீருல் மில்லத் ஜிந்தாபாத் உள்ளிட்ட உற்சாகமான கோஷங்களை எழுப்பி ஆரவாரமான வரவேற்பளித்து ஏராளமான வாகனங்கள் சூழ அழைத்து சென்றனர்.
தென்காசி ரயில் நிலையமே பச்சிளம் பிறைக் கொடியால் பசுமையாய் காட்சியளித்தது.
தகவல்- புளியங்குடி ஷாகுல் ஹமீது

தென்காசி ரயில் நிலையத்தில் தேசிய தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர்முகைதீன் எம்.பி.,மற்றும் நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments: