துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா காயல் மவ்லவி டி.எஸ்.ஏ. செய்யது அபுதாஹிர் ஆலிம் பங்கேற்பு
துபாய் ஈமான் அமைப்பு 08.03.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) மீலாதுப் பெருவிழாவினை சிறப்பாக நடத்தியது.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கூத்தாநல்லூர் அஹமது மைதீன் தலைமை தாங்கினார். ஹாபிழ் பஷீர் அஹ்மது இறைவசனங்களை ஓதினார். அப்துல் ரஹ்மான் இஸ்லாமிய கீதம் பாடினார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நிறுவனர் முஹம்மது மஃரூப், அன்புடன் அல்லாவுக்கு கவிதை நூல் ஆசிரியர் நாகர்கோவில் சாகுல் ஹமீது, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா ஈமான் அமைப்பின் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் அரேபியா ஆகிய விமான சேவைகள் தமிழகத்திற்கு தொடங்க ஏற்படுத்தப்பட்ட முயற்சிகள் குறித்து விவரித்தார்.
ஈமான் அமைப்பின் மீலாது விழா சிறப்புப் பேச்சாளர் அல் அஸ்ரார் மாத இதழ் ஆசிரியர் காயல் மவ்லவி அப்ஸலுல் உலமா டி.எஸ்.ஏ. செய்யது அபுதாஹிர் ஆலிம் மஹ்ழரி விழாப் பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களது பிறந்த நாளை தெரியாதவர்கள் யாரும் இல்லை. இருக்கவும் கூடாது என்றார். வள்ளல் நபியின் பிறப்பை உலகமே எதிர்பார்த்த ஒன்று.
மாநபி ( ஸல் ) அவர்கள் ஹஜ்ஜின் போது நிகழ்த்திய இறுதிப் பேருரை உலக மக்கள் யாவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளாகும்.மனித உரிமைகள் குறித்து நபிகளார் வலியுறுத்தியுள்ளார். மனைவி கணவனுக்கும், பெற்றோர் பிள்ளைக்கும், முதலாளி தொழிலாளிக்கும், ஆசிரியர் மாணவருக்கும் அளிக்க வேண்டிய கடமை குறித்து இஸ்லாம் வலியுறுத்துவதை விவரித்தார். ஆளும் ஆட்சியாளர்களை மக்களே தேர்வு செய்யும் ஜனநாயக முறையினை வகுத்துத் தந்தவர்கள் பெருமானார் ( ஸல் ).
இப்படி நபிகளாரின் வாழ்வும், வாக்கும் நமக்கு முன்மாதிரியாக சமூக ஈடேற்றம் காணும் வகையில் அமைந்துள்ளது.
ஈமான் அமைப்பு மீலாது விழாவினையொட்டி நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சம்சுதீன் காக்கா, முஹம்மது மஃரூப், ஏ.லியாக்கத் அலி, எம்.அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன், எம். அப்துல் ரஹ்மான், மவ்லவி காஜா முஹம்மது ஜமாலி மக்கீ உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
முதல் பரிசான எமிரேட்ஸ் நிறுவனம் வழங்கும் சென்னை துபாய் சென்னை பயணச்சீட்டை யூ. சோபியா பர்வீனும், இரண்டாம் பரிசான ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் ஆயிரத்துக்கான பரிசை என். வஹிதா பானுவும், மூன்றாம் பரிசான லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 8 கிராம் தங்க நாணயத்தை எப். சாஹுல் ஹமீதுவும், நான்காம் பரிசான ஈடிஏ அஸ்கான் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக் கூப்பனை முத்து பீவி பாத்திமாவும், ஐந்தாம் பரிசான இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 க்கான பரிசை கதீஜா சபானாவும், அல்ஹஸீனா ஜுவல்லரி வழங்கும் ஆறுதல் பரிசுகளை ஜெஸிலா ரியாஸ், எ. செய்யது அலி, பாயிஸா ரஹ்மான், பாத்திமுத்து ஸாஹிரா, மீனா குமாரி பத்மநாதன், குலாம் ஷரீப், ரஷீது அன்வர், எம். பர்வீன் பாத்திமா, முஹம்மது ரஸீம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், அன்னபூர்ணா கேட்டரிங் வழங்கும் ஆறுதல் பரிசை எ.எம். ஜாபர் சாதிக்கும், மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் கைக்கடிகாரங்களை முஹம்மது இப்ராஹிம், ஜெகந்நாதன், எஸ்.எம். செய்யது ஹுசைன் ஆகியோரும், அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் ஆறுதல் பரிசை இஸ்ஹாக் அலியும், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வழங்கும் ஆறுதல் பரிசுகளை எஸ். செய்யது முஸ்தபா, எப்.கலீல் ரஹ்மான், முஹ்யித்தீன் அப்துல் காதர், எஸ்.ஏ. ஷேக் முஹம்மது, எம். முஹம்மது ரூமி, எம்.ஏ. அப்துல் காதர், ஆர். மிலாஹர், முஹம்மது அன்சாரி உள்ளிட்டோர் பெற்றனர்.
முன்னதாக ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை மௌலிது மஜ்லிஸ் நடைபெற்றது. ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன், கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தொடர் சொற்பொழிவு நிகழ்வு மற்றும் மீலாதுப் பெருவிழாவினை ஷாஹுல் ஹமீது ஒளிப்பதிவு செய்தார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment