துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன்
துபாய் : துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷனின் 15 ம் ஆண்டு வருடாந்திர பொதுக்கூட்டம் ஜனவரி 8 வெள்ளிக்கிழமை ( ஹிஜ்ரி 1431 முஹர்ரம் 22 ) ஜும் ஆ தொழுகைக்குப் பின்னர் அல் மம்சார் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
கூட்டத்திற்க்கு தலைவர் எம்.ஏ. முஹம்மது அப்துல் பத்தாஹ் தலைமையேற்கவும், துணைத்தலைவர் ஈ.கே.எம்.ஜே. சிராஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தவும், செயலாளர் கே.சுல்தான் அப்துல் காதர் ஆண்டறிக்கை வாசிக்கவும், பொருளாளர் ஏ. ஹுமாயுன் கபீர் நிதிநிலை அறிக்கை வாசிக்கவும், தணிக்கையாளர் அறிக்கையினை இ. குத்புதீனும் வழங்க உள்ளனர்.
சங்க செயலாக்கம் செயல்படுத்தல் திட்டம் மற்றும் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற உள்ளது. துணை செயலாளர் ஆர். இன்சான் அலி நன்றியுரை நிகழ்த்துவார்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 050 7499 427 எனும் எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வில் கொடிக்கால்பாளையம் நகரைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் : MUSLIM NEWS AGENCY ( M.N.A. )
1 comment:
A raja from india witnessed the miracle of Shaqqul qamar. the reference quoted in some books is
Maha bharta persian translation by abulafazal faizee in the reign of Akbar the great mughal empror of india publishe from nawalakishor press lucnow india. reference found in chapter 3 shant prabh moche dharam page 424-425
unfortunately the book is not available in Pakistan. If any person in your contact has the book plz sned the pdf format phot copy of the said book on the following email address.or whole book could be digitized .
Post a Comment