கிருஷ்ணகிரியில் பிப். 17-ல் உருது மாநாடு: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்பு
கிருஷ்ணகிரி, பிப். 14: கிருஷ்ணகிரியில் பிப். 17-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான உருது மாநாட்டில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து பஸ்மே அதப் அமைப்பின் தலைவர் முக்தார் பத்ரி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:
பஸ்மே அதப் எனும் உருது இலக்கியச் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான உருது மாநாடு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் செவ்வாய்க்கிழமை (பிப். 17-ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தொடங்கி வைத்து 7 உருது நூல்களை வெளியிடுகிறார்.
மாநாட்டில் உருது கவி, கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உருது பள்ளிகளில் 75 வருடங்களைக் கடந்த 40 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக யுனானி மருத்துவத் துறையில் சேவையாற்றி வரும் டாக்டர் சலாவுதீனை கெüரவிக்கப்படுகிறார் என்றார்.
பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை (எ) துரைசாமி, டாக்டர் சலாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment