Thursday, February 26, 2009

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது துபாய் வருகை : ஈமான் சங்கத்தினர் வரவேற்பு




டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது துபாய் வருகை : ஈமான் சங்கத்தினர் வரவேற்பு


துபாய் ஈமான் அமைப்பு வெள்ளிக்கிழமை ( 27.02.2009 ) வெள்ளிக்கிழமை மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் 26.02.2009 அன்று காலை வருகை புரிந்த டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்று டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது மற்றும் அவரது துணைவியாரையும் வரவேற்றனர்.

No comments: