தேரிழந்தூரில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்
தேரிழந்தூரில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைவதற்கான ஆலோசனைக் கூட்டம் 20.02.2009 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அர்ரஹீமிய்யா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ஏ. ஜிர்ஜிஸ் தலைமை தாங்குகிறார். ஏ.ரூபியா கிராஅத் ஓதுகிறார்.
ஏ. அசரப் அலி, ஏ.அப்துல் ஹை, ஏ.அப்துல் பாரி, ஏ. அப்துல் ரஹீம், ஏ.ஹாஜா கமால், கே.எம்.பி. முஹம்மது சலீம் மற்றும் ஹெச். ஹஸ்புல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. கல்யாணம், ஒன்றியப் பெருந்தலைவர் கோ.சி. மதியழகன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
ஏ. முஹம்மது ரஃபிக் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
சமுதாய ஆர்வலர்கள் கலந்து கொண்டு அரிய ஆலோசனைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேரிழந்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் என்.ஆர்.இ. கல்விக்குழு ஆகியோர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment