துபாய் ஈமான் மீலாதுந்நபி விழா சிறப்புச் சொற்பொழிவு
காயல் ஆலிம் சிறப்பு அழைப்பாளராக வருகை
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
கடந்த 33 ஆண்டுகளாக நம் ஈமான் ( www.imandubai.org ) சங்கம் இயங்கி வருவதையும், இதன் மூலம் பல்வேறு சமுதாய நலப்பணிகள் நடத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும் புனித மீலாது விழா நடத்தப்பட்டு அதன் மூலம் அமீரகத்தின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது வழக்கம்.
சன்மார்க்கக் கருத்துக்களையும், சமுதாய உணர்வுகளையும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக மக்களுக்கு எடுத்து வைப்பது இதன் குறிக்கோள்.
இவ்வகையில் இன்ஷா அல்லாஹ் இவ்வருட புனித மீலாது விழா நிகழ்ச்சிக்கு காயல்பட்டணத்தைச் சார்ந்த ஆலிம் பெருந்தகை மவ்லவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா T.S.A. செய்யது அபுதாஹிர் ஆலிம் மஹ்ழரி பாஜில் ஜமாலி M.A., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தர இருக்கிறார்கள்.
ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் ( 25 பிப்ரவரி 2009 ) பிறை 11 வரை ( 07 மார்ச் 2009 ) தேரா கோட்டைப் பள்ளியில் ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிறகு சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையுடன் இணைந்து தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிறை 12 ( 08 மார்ச் 2009 ) அன்று இஷாவிற்குப் பிறகு லூத்தா ஜாமி ஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) புனித மீலாது விழா சிறப்புப் பேருரை ஆலிம் அவர்களால் வழங்கப்பட இருக்கிறது.
பிறை 1 முதல் 12 வரை ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிறகு குவைத் பள்ளியில் மவ்லீது மஜ்லிஸ் நடைபெற இருக்கிறது.
பிறை 12 ( 09 மார்ச் 2009 ) அன்று அபுதாபி இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( அய்மான் ) சார்பில் மீலாது விழா நடைபெற இருக்கிறது.
மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
ஏ. லியாக்கத் அலி
பொதுச்செயலாளர்
ஈமான்
T.S.A. யஹ்யா முஹையத்தீன்
விழாக்குழு செயலாளர்
ஈமான்
050 58 53 888
No comments:
Post a Comment