இந்தியா முழுவதும் 22 போலி பல்கலைக்கழகம் யு.ஜி.சி. எச்சரிக்கை
இந்தியா முழுவதும் மொத்தம் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.
போலி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில சட்டசபை சட்டம் அல்லது யுஜிசி சட்டப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் நடத்தி பட்டங்களை வழங்க முடியும்.
ஆனால், கல்வி சேவை அளிப்பதாக சங்கங்களின் பெயரில் பதிவு செய்து விட்டு பலர் பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றனர். இதுபோல் நாடு முழுவதும் மொத்தம் 22 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதை யு.ஜி.சி. கண்டுபிடித்துள்ளது. அவற்றின் பெயர்களை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு: டி.டி.பி சமஸ்கிருத பல்கலைக்கழகம், திருச்சி. டெல்லி: வாரணாசிய சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், ஏடிஆர் சென்ட்ரிக் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி, இன்டியன் இண்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங். கர்நாடகா: பதகன்வி சர்கார் உலக திறந்தவெளி பல்கலைக்கழக கல்வி சங்கம், பெல்காம். கேரளா: செயின் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம். மத்தியப் பிரதேசம்: கேசர்வனி வித்யாபித், ஜபல்பூர். மகாராஷ்டிரா: ராஜா அராபிக் பல்கலைக்கழகம், நாக்பூர். மேற்கு வங்கம்: இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசன். உத்தரப்பிரதேசம்: மகிளா கிராம் வித்யாபித், இந்தியன் கல்வி கவுன்சில், எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தவெளி பல்கைலக்கழகம், இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷத், குருக்கள் விஸ்வ வித்யாலயா.
No comments:
Post a Comment